செண்பகப் பூவைப் பார்த்து
ஒரு சேதி சொன்னது காற்று
என் பொன்னழகன் கைகளதைக் கொண்டால்
அந்தப் பூவுக்கொரு மோட்சம் வரும் என்று
செண்பகப் பூவைப் பார்த்து
ஒரு சேதி சொன்னது காற்று
என் கோதை மகள் கூந்தலதைக் கொண்டால்
அந்தப் பூவுக்கொரு மோட்சம் வரும் என்று
(செண்பகப்பூவைப் பார்த்து)
மடியில் பிறந்த நதியை மலைகள் மறைத்து வைப்பதும் இல்லை
செடியில் பிறந்த மலரைச் செடிகள் சிறையில் வைப்பதும் இல்லை
மனிதன் கொண்ட காதல் மட்டும் மறைத்து வைப்பதென்ன
மலைக் காட்டில் ஆடுந்தளிர் போல் மனந் துடிப்பதுமென்ன
கலைந்தோம் கலைந்தோம் மெளனம் கலைந்தோம்
தண்ணீரில் பெய்யும் மழைபோல் ஒன்றாய் இணைகிறோம்.
செண்பகப் பூவைப் பார்த்து
ஒரு சேதி சொன்னது காற்று
என் கோதை மகள் கூந்தலதைக் கொண்டால்
அந்தப் பூவுக்கொரு மோட்சம் வரும் என்று
செண்பகப் பூவைப் பார்த்து
ஒரு சேதி சொன்னது காற்று
கழுத்துவரை ஆசைகளைப் புதைத்து வைத்தவள் தானே
இவள் கனவுகளில் நீர் குடித்துத் தரையில் வாழும் மீனே
கனவுகளும் ஆசைகளும் காதலின் உரிமை
உரிமைகளை அடைவதற்கே உரிய இடம் தனிமை
கனவுகளும் ஆசைகளும் காதலின் உரிமை
உரிமைகளை அடைவதற்கே உரிய இடம் தனிமை
தொடுங்கள் தொடுங்கள் அதுதான் இனிமை
இப்போது எங்கே கனியும்
இவள் கொண்ட கண்ணில்
செண்பகப் பூவைப் பார்த்து
ஒரு சேதி சொன்னது காற்று
என் பொன்னழகன் கைகளதைக் கொண்டால்
அந்தப் பூவுக்கொரு மோட்சம் வரும் என்று
செண்பகப் பூவைப் பார்த்து
ஒரு சேதி சொன்னது காற்று
என் கோதை மகள் கூந்தலதைக் கொண்டால்
அந்தப் பூவுக்கொரு மோட்சம் வரும் என்று
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள் . எஸ்.பி.பி, சுஜாதா
திரைப்படம் : பாசமலர்கள்
2 Comments:
நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றி.
இனிமை நிறைந்த பாடல்.. இதயம் தொடுகிறது. வழங்கியமைக்கு நன்றி.. தேன்கிண்ணத்தில் கிடைக்கின்ற அனைத்துப் பாடல்களும் தேன் சொட்டுவதில் வியப்பென்ன?
காவிரிமைந்தன் kmaindhan@gmail.com
Abu Dhabi
Post a Comment