பூங்கதவே தாழ் திறவாய்
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
பூங்கதவே தாழ் திறவாய்
நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆகா கா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்..ம்ம்.
[பூங்கதவே தாழ்..]
திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.
[பூங்கதவே தாழ்...]
படம் : நிழல்கள்
இசை : இளையராஜா
பாடியவர் : தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
பாடலாசிரியர் : கங்கை அமரன்
Tuesday, January 1, 2008
164. பூங்கதவே தாழ் திறவாய்
பதிந்தவர் ஜே கே | J K @ 11:35 PM 3 பின்னூட்டங்கள்
Subscribe to:
Posts (Atom)