Wednesday, April 6, 2011

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே


நடிகை சுஜாதா அவர்களுக்கு அஞ்சலிகள்.


பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

(பூவிழி வாசலில் யாரடி…..)

அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது
மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுதே
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை

(பூவிழி வாசலில் யாரடி…..)

இள மாலைத்தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார்மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ
எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே

(பூவிழி வாசலில் யாரடி…..)

கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ
கலை இது அறிமுகம் வேண்டுமா
அசைந்தாடும் கூந்தல் நாமாகவோ
நவரச நினைவுகள் போதுமா
பூமேனியோ மலர் மாளிகை
பொன்மாலையில் ஒரு நாழிகை
நாளும் நான் ஆடவோ
அணைக்கும் துடிக்கும் சிலிர்க்கும் மேனி

(பூவிழி வாசலில் யாரடி…..)


படம் : தீபம்
இசை: இளையராஜா
பாடியவர்: K.J.ஜேசுதாஸ் ,S.ஜானகி
வரிகள்: புலமைபித்தன்

1 Comment:

ADHI VENKAT said...

நடிகை சுஜாதாவுக்கு அஞ்சலிகள்.

Last 25 songs posted in Thenkinnam