Tuesday, April 19, 2011

கண்களால் காதல் காவியம்

கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்

தங்கள் அன்பெனும் சாம்ராஜ்யம்
சொந்தமானதே எந்தன் பாக்கியம்

கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்
உந்தன் அன்பெனும் சாம்ராஜ்யம்
சொந்தமானதே எந்தன் பாக்கியம்

தங்களால் ஆ ஆ ஆ ஆ
தங்களால் இந்த இன்பமே
என்றும் சாஸ்வதமாகிட வேண்டுமே
(தங்களால்)
தங்கமே அதில் ஐயமேன்?
இன்ப சாகரம் மென்மேலும் பொங்குமே ஏ ஏ ஏஏ
(தங்கமே)
திங்களைக்கண்ட அல்லி போல்
திருவாய் மொழியால்
உள்ளம் மலருதே
செந்தமிழ் கலைச்செல்வியே
மனம் தேனுன்னும் வண்டாய் மகிழுதே
(கண்களால் )

மண்ணிலே ஆ ஆ ஆ
மண்ணிலே உள்ள யாவும்
எழில் மன்னவர் உம்மைப்போல் காணுதே
எண்ணமே ஒன்று ஆனதால்
இணையில்லாத ஆனந்தம் தோணுதே
(எண்ணமே)
இன்பமோ அன்றி துன்பமோ
எது நேரினும் நாம் பங்கு கொள்ளுவோம்
அன்றில் போல் பிரியாமலே
நாம் இன்று போல் என்றுமே வாழ்வோம்

பாடியவர்: ஜிக்கி, டி. எம். எஸ்
இசை: ஜி. ராமநாதன்
திரைப்படம்: சாரங்கதாரா
பாடல் : மருதகாசி???

<p><a href="http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Sarangathara.html?e">Listen to Sarangathara Audio Songs at MusicMazaa.com</a></p>

2 Comments:

Asiya Omar said...

periya idaththu vishayam appadi irukku-
vasantha mullai poola vanthu - paadal -- aahaa anaiththum super.
pazhaiya paadal pakirvukku nanri.

Asiya Omar said...

kankalaal kaathal kaaviyam paadalum - veku arumai..
ini adikkadi isai mazhaiyil nanaiyalaam - nanri nanri -muthuletchumi.
ippa paarththu tamil typing problem..

Last 25 songs posted in Thenkinnam