Wednesday, April 27, 2011

என்னுயிரே ஏனுனக்கு

என்னுயிரே ஏனுனக்கு
என் மனம் புரியவில்லை
கன்னி மயில் நீர்துளிக்கு
காரணம் தெரியவில்லை

உனக்காக வாழும் ஜீவன்
உனை மீறி எங்கு போகும்
உறவே நீதான் உலகம்நீதான்


கண்ணில் கண்டிடும் காட்சிகள்
யாவுமே மாயமே
தப்பு நேரும் முன்
என்னுயிர் நீங்கியே போகுமே

அழகான சோலைக்குள்ளே
நுழைந்தாடும் மந்திபோல
விபரீதமாக இங்கே
விதி வந்து ஆடுதன்பே
அறிந்தால் போதும் அமைதி ஆகும்

என்னுயிரே ஏனுனக்கு
என் மனம் புரியவில்லை
கன்னி மயில் நீர்துளிக்கு
காரணம் தெரியவில்லை

பாடியவர் : உமா ரமணன்
திரைப்படம் : கஜா
இசை : மணிஷர்மா
பாடல் : விஜய் சாகர்

Tuesday, April 26, 2011

விழிதீபம் உனைத்தேடும்

விழிதீபம் உனைத்தேடும்
புதுராகம் மனம் பாடும்
சங்கீத மேடை
தெய்வீக ஜாடை (விழிதீபம்)

உன் பாடல் கேட்டு
தென்றல் இளங்காற்று
உரசும் தழுவும் தினம்தோறும் (உன்பாடல்)
பூவான எந்தன் நெஞ்சம்
எந்நாளும் உந்தன் சொந்தம் (பூவான)
கடைக்கண் பார்வை பேசாதோ
(விழிதீபம்)

ஆனந்த வெள்ளம் பொங்கிவரும் நேரம்
அடடா இதுபோல் சுகமேது
சந்தோச மாலை போட்டு
சங்கீத வீணை மீட்டு (சந்தோச)
இதயம் கனவில் நீந்தாதோ
(விழிதீபம்)

பாடலை இங்கே கேட்கலாம்.



திரைப்படம் : கடைக்கண் பார்வை
பாடியவர்கள்: பி.சுசீலா, எஸ்.பி.பி
இசை : V.S. நரசிம்மன்
பாடல் : மு. மேத்தா

Thursday, April 21, 2011

விழியோரத்துக் கனவும் இங்கு கரைந்தோடிடுதே

விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே
விடியும் என்ற பொழுதில்
வந்து இருள் மூடிடுதே

கதைபோல் வந்த உறவு
இடையே இந்த பிரிவு
இசைகூடிய கவிதை
அதன் ஒலித்தேன் அதும் ஏனோ?

விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே
விடியும் என்ற பொழுதில்
வந்து இருள் மூடிடுதே

விழியோரத்துக் கனவும்
இங்கு கரைந்தோடிடுதே

ஆஆ ஆஆ ஆ
ஆஆஆ ஆஆஆ

ஒரு ஓவியக்கவிதை
கண்ணீரினில் நனையும்
ஒரு காவியக்கனவை
தினமும் மனம் நினைக்கும்
இருகாதலர் நடத்தும்
தனிமைப் பயணம்
ஒரு பாதையில் இருந்தும்
அதில் பிரிவும் ஏனோ?

திரைப்படம்: ராஜபார்வை
பாடியவர் : உமா ரமணன் , கமலஹாசன்
இசை : இளையராஜா

Tuesday, April 19, 2011

கண்களால் காதல் காவியம்

கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்

தங்கள் அன்பெனும் சாம்ராஜ்யம்
சொந்தமானதே எந்தன் பாக்கியம்

கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்
உந்தன் அன்பெனும் சாம்ராஜ்யம்
சொந்தமானதே எந்தன் பாக்கியம்

தங்களால் ஆ ஆ ஆ ஆ
தங்களால் இந்த இன்பமே
என்றும் சாஸ்வதமாகிட வேண்டுமே
(தங்களால்)
தங்கமே அதில் ஐயமேன்?
இன்ப சாகரம் மென்மேலும் பொங்குமே ஏ ஏ ஏஏ
(தங்கமே)
திங்களைக்கண்ட அல்லி போல்
திருவாய் மொழியால்
உள்ளம் மலருதே
செந்தமிழ் கலைச்செல்வியே
மனம் தேனுன்னும் வண்டாய் மகிழுதே
(கண்களால் )

மண்ணிலே ஆ ஆ ஆ
மண்ணிலே உள்ள யாவும்
எழில் மன்னவர் உம்மைப்போல் காணுதே
எண்ணமே ஒன்று ஆனதால்
இணையில்லாத ஆனந்தம் தோணுதே
(எண்ணமே)
இன்பமோ அன்றி துன்பமோ
எது நேரினும் நாம் பங்கு கொள்ளுவோம்
அன்றில் போல் பிரியாமலே
நாம் இன்று போல் என்றுமே வாழ்வோம்

பாடியவர்: ஜிக்கி, டி. எம். எஸ்
இசை: ஜி. ராமநாதன்
திரைப்படம்: சாரங்கதாரா
பாடல் : மருதகாசி???

<p><a href="http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Sarangathara.html?e">Listen to Sarangathara Audio Songs at MusicMazaa.com</a></p>

Wednesday, April 6, 2011

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே


நடிகை சுஜாதா அவர்களுக்கு அஞ்சலிகள்.


பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

(பூவிழி வாசலில் யாரடி…..)

அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது
மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுதே
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை

(பூவிழி வாசலில் யாரடி…..)

இள மாலைத்தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார்மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ
எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே

(பூவிழி வாசலில் யாரடி…..)

கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ
கலை இது அறிமுகம் வேண்டுமா
அசைந்தாடும் கூந்தல் நாமாகவோ
நவரச நினைவுகள் போதுமா
பூமேனியோ மலர் மாளிகை
பொன்மாலையில் ஒரு நாழிகை
நாளும் நான் ஆடவோ
அணைக்கும் துடிக்கும் சிலிர்க்கும் மேனி

(பூவிழி வாசலில் யாரடி…..)


படம் : தீபம்
இசை: இளையராஜா
பாடியவர்: K.J.ஜேசுதாஸ் ,S.ஜானகி
வரிகள்: புலமைபித்தன்

Last 25 songs posted in Thenkinnam