Monday, November 8, 2010

வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்



அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கட்டி வேணும்
தல வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததிகின ததிகின ததிகின தகத்தோம்
(வீட்டுக்கு..)

அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டும்
அதில் முத்து எடுப்பவன் கஷ்டம்
இந்த ஊருக்கு தெரியாது
உள் மனசுல ஆயிரம் பாரம்
அது பாட்டுல ஓடிடும் தூரம்
இது யாருக்கும் புரியாது

ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல
ஆணில்லாம பெண்ணும் இல்ல
துன்பம் இல்ல பேரும் இல்ல
வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததிகின ததிகின ததிகின தகத்தோம்
(வீட்டுக்கு..)

புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு
ரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு
என்றும் வாழணும் பல்லாண்டு
ஒரு மல்லிகை மெத்தையை பாரு
அந்த மன்மதன் வித்தையை காட்டு
நான் கேட்கணும் தாலாட்டு

ஆடை இல்லாத உடலும் இல்ல
அலையும் இல்லா கடலும் இல்ல
ஓசை இல்லா மணியும் இல்ல
பாசம் இல்லா மனசும் இல்ல
வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததிகின ததிகின ததிகின தகத்தோம்
(வீட்டுக்கு..)

படம்: கிழக்கு வாசல்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா
வரிகள்: RV உதயகுமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam