Tuesday, November 30, 2010

காதலாகி கனிந்தது


Get Your Own Hindi Songs Player at Music Plugin

காதலாகி கனிந்தது
காவல் மீறி கலந்தது
ஊடல் ஆகி பிரிந்தது
பாதை மாறி திரிந்தது
மீண்டும் இன்று இணைந்திட
மேடை வந்து இசை பாட

தேன் நீர் கால இரவுகள்
வாழ்ந்த கால உறவுகள்
காதல் போல மறைந்திட
கண்ணில் நீரும் நிறைந்திட
வாடி நின்ற இரு மனம்
கூடும் இன்றி இனித்தாக

பாடு பாடு பூங்காற்றே
பூவும் கேட்கும் உன் பாட்டே
ஊடல் தீர வேண்டும்
கூடல் நேர வேண்டும்
வானம் உள்ள காலம்
வாழ வேண்டும் சொந்தம்

காதல் என்னும் போரிலே
காயல் கொள்ள நேரலாம்
காலம் கொஞ்சம் போனதும்
காயம் மெல்ல ஆறலாம்
தூக்கம் என்னும் பக்கமும்
சொர்க்கம் இன்னும் பக்கமும்
ரெண்டும் இங்கு கொண்டது
வாழ்க்கை என்னும் புத்தகம்

வைக்கும் எங்கள் தேர்விலே
வெல்லும் உந்தன் சங்கதி
வென்றால் இந்த நாளிலே
வாய்க்கும் நெஞ்சில் நிம்மதி
ஊரே மெச்சும் பாடகன்
உங்கள் முன்பு நிற்பது
தென்றல் பாடும் தேனிசை
இங்கே வந்து கற்பது

போட்டி போட ஒரு குயில்
பாட்டு பாட வருகையில்
கூடி வாழ்ந்த கதைகளை
பாட்டில் வைத்து தருகையில்
தூது செல்லும் இசை இது
தூகை நெஞ்சும் உருகாதோ

மாதம் தேதி கண்டது
மௌனமாக நடந்தது
ஆண தூதும் பழகிய
அன்பு நெஞ்சில் கிடந்தது
பார்க்கும்போது விழிகளில்
பாச வெள்ளம் பெருகாதோ

மேடை ஏறி பாடும் நாள்
மீண்டு ஒன்று கூடும் நாள்
தென்றல் ஓய கூடும்
திங்கள் சாய கூடும்
மார்க்கண்டேயன் போலே
காதல் வாழும் நெஞ்சில்

வானம் அல்ல இது ஒரு
பாசம் பேசும் இலக்கியம்
வார்த்தை அல்ல இது ஒரு
வாழ்வு தூறும் இலக்கணம்
ஆணும் பெண்ணும் உறவிலும்
ஆலயத்தின் இரு பக்கம்

வேறு வேறு இடங்களில்
வேறு வேறு நிறங்களில்
வாழ நேரும் பொழுதிலும்
வேறு அல்ல இருவரும்
ஒன்று ஒன்று இணைந்திட
மேடை வந்து இசை பாட

படம்: பாப் கார்ன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam