Get Your Own Hindi Songs Player at Music Plugin
காதலாகி கனிந்தது
காவல் மீறி கலந்தது
ஊடல் ஆகி பிரிந்தது
பாதை மாறி திரிந்தது
மீண்டும் இன்று இணைந்திட
மேடை வந்து இசை பாட
தேன் நீர் கால இரவுகள்
வாழ்ந்த கால உறவுகள்
காதல் போல மறைந்திட
கண்ணில் நீரும் நிறைந்திட
வாடி நின்ற இரு மனம்
கூடும் இன்றி இனித்தாக
பாடு பாடு பூங்காற்றே
பூவும் கேட்கும் உன் பாட்டே
ஊடல் தீர வேண்டும்
கூடல் நேர வேண்டும்
வானம் உள்ள காலம்
வாழ வேண்டும் சொந்தம்
காதல் என்னும் போரிலே
காயல் கொள்ள நேரலாம்
காலம் கொஞ்சம் போனதும்
காயம் மெல்ல ஆறலாம்
தூக்கம் என்னும் பக்கமும்
சொர்க்கம் இன்னும் பக்கமும்
ரெண்டும் இங்கு கொண்டது
வாழ்க்கை என்னும் புத்தகம்
வைக்கும் எங்கள் தேர்விலே
வெல்லும் உந்தன் சங்கதி
வென்றால் இந்த நாளிலே
வாய்க்கும் நெஞ்சில் நிம்மதி
ஊரே மெச்சும் பாடகன்
உங்கள் முன்பு நிற்பது
தென்றல் பாடும் தேனிசை
இங்கே வந்து கற்பது
போட்டி போட ஒரு குயில்
பாட்டு பாட வருகையில்
கூடி வாழ்ந்த கதைகளை
பாட்டில் வைத்து தருகையில்
தூது செல்லும் இசை இது
தூகை நெஞ்சும் உருகாதோ
மாதம் தேதி கண்டது
மௌனமாக நடந்தது
ஆண தூதும் பழகிய
அன்பு நெஞ்சில் கிடந்தது
பார்க்கும்போது விழிகளில்
பாச வெள்ளம் பெருகாதோ
மேடை ஏறி பாடும் நாள்
மீண்டு ஒன்று கூடும் நாள்
தென்றல் ஓய கூடும்
திங்கள் சாய கூடும்
மார்க்கண்டேயன் போலே
காதல் வாழும் நெஞ்சில்
வானம் அல்ல இது ஒரு
பாசம் பேசும் இலக்கியம்
வார்த்தை அல்ல இது ஒரு
வாழ்வு தூறும் இலக்கணம்
ஆணும் பெண்ணும் உறவிலும்
ஆலயத்தின் இரு பக்கம்
வேறு வேறு இடங்களில்
வேறு வேறு நிறங்களில்
வாழ நேரும் பொழுதிலும்
வேறு அல்ல இருவரும்
ஒன்று ஒன்று இணைந்திட
மேடை வந்து இசை பாட
படம்: பாப் கார்ன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி
Tuesday, November 30, 2010
காதலாகி கனிந்தது
பதிந்தவர் MyFriend @ 1:41 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
Monday, November 29, 2010
தோம் தோம் தித்தித்தோம்
பதிவர் நாகை சிவா அவர்களின் திருமண நாளுக்காக இப்பாடல் தேன்கிண்ணத்தில் ஒலிக்கிறது..தம்பதியருக்கு வாழ்த்துக்கள் .
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித் தீண்டித் தூண்டும் விரலை
திட்டிக்கொண்டே தித்தித்தோம்
(தோம்..)
ஆணில் உள்ள பெண்ணைக் கொஞ்சம்
பெண்ணில் உள்ள ஆணைக் கொஞ்சம்
கொஞ்சச் சொல்லி கொஞ்சச் சொல்லி
கொஞ்சச் சொல்லி யாசித்தோம்
(ஆணில்..)
கொத்திக் கொத்தி பேசும் கண்ணை
திக்கி திக்கி வாசித்தோம்
சுற்றிச் சுற்றி வீசும் காற்றை
நிற்கச் சொல்லி ஸ்வாசித்தோம்
உன்னை என்னை துண்டித்தோம்
உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம்
மீண்டும் மீண்டும் சீண்டும் இதழை
முத்தம் செய்து தித்தித்தோம்
(தோம்..)
தீயில் உள்ள நீரைக் கொஞ்சம்
நீரிலுள்ள தீயைக் கொஞ்சம்
சேரச் சொல்லி சேரச் சொல்லி
சேரச் சொல்லி யாசித்தோம்
(தீயில்..)
ஒற்றைச் சொல்லை சொல்லத்தானே
கோடி சொல்லை வாடித்தோம்
மெல்லப் பேசி மெல்ல தொட்டு
மெதுவாய் வயதை சோதித்தோம்
நிழலையும் தேடி நேசித்தோம்
கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்
இன்னும் இன்னும் என்றே நம்மை
தின்னச்சொல்லி தித்தித்தோம்
(தோம்..)
படம்: அள்ளி தந்த வானம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா
வரிகள்: அறிவுமதி
பதிந்தவர் MyFriend @ 10:00 AM 5 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2000's, அறிவுமதி, சித்ரா, வித்யாசாகர், ஹரிஹரன்
வெல்கம் கெர்ள்ஸ் வெல்கம் பாய்ஸ்
வெல்கம் கெர்ள்ஸ் வெல்கம் பாய்ஸ்
இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்
நோ டென்ஷன் நோ பிபி
எனது கொள்கை பி ஹேப்பி
நாள்தோறும் காக்டெயில் பார்ட்டி நண்பா ஷேர் வித் மீ
ஆனந்த மழை 50 அன்பே ஷேர் வித் மீ
எனக்கு என்றும் ஜாலி மூடுதான்
இளமைக்கேத்த எல்லை கோடுதான்
செல்போன்கள் பக்கமிருக்கு நண்பா ஷேர் வித் மீ
(வெல்கம்..)
சம்மர் விண்டர் ஷேர் வித் மீ
சேம்பெயினில் ஷேர் வித் மீ
ஸ்விம்மிங் பூலில் ஹெல்து க்ளப்பில்
டிஸ்கோத்தேவில் ஷேர் வித் மீ
ஃபர்ஸ்டு மியூசிக் ஷேர் வித் மீ
பாபும் ஜாஸ்ஸும் ஷேர் வித் மீ
லேட்டஸ்ட் ஆல்பம் மைக்கேல் ஜேக்ஸன்
போட்டோ ஆல்பம் ஷேர் வித் மீ
சண்டே சில்வர் பீச்சுலதான்
மண்டே நைட் க்ளப்லதான்
டியூஸ்டே ஃபிஷிங் லான்சுலதான்
டெய்லி ஓவல் சேஞ்சுலதா
வாழத்தான் வந்து பிறந்தோம்
அன்பே ஷேர் வித் மீ
(வெல்கம்..)
இண்டர்னெட்டில் ஷேர் வித் மீ
ஈமெயிலில் ஷேர் வித் மீ
மாடலிங்கில் ஃபேஷன் ஷோவில்
பெப் ஜீன்ஸில் ஷேர் வித் மீ
சேட்டிங் ப்ராப்ளம் ஷேர் வித் மீ
டேட்டிங் ப்ராப்ளம் ஷேர் வித் மீ
டீன் ஏஜ் ப்ராப்ளம் காலேஜ் ப்ராப்ளம்
மேரெஜ் ப்ராப்ளம் ஷேர் வித் மீ
ஃப்ரீ பெர்ட் எந்தன் வாழ்க்கையடா
ஸ்பீட் ப்ரேக் எதுவுமே இல்லையடா
ஓன் வோர்ல்ட் என்பதே இல்லையடா
வாழத்தான் வந்து பிறந்தோம்
அன்பே ஷேர் வித் மீ
(வெல்கம்..)
படம்: பிரியமானவளே
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: சுக்விந்தர் சிங்
பதிந்தவர் MyFriend @ 1:03 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
Sunday, November 28, 2010
அடி யாரது யாரது அங்கே
Get Your Own Hindi Songs Player at Music Plugin
அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிப்போனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா
(அடி..)
பனிரோஜா தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா
அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா
நீ கனவா கற்பனையா
அட இன்னும் தெரியலையா
(அடி..)
என் சேலைச் சோலைக்குள் முதல் பூவை பறித்தாயே
என்னை மிச்சம் இல்லாமல் நீ அள்ளிக் குடித்தாயே
முதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை அடித்தாயே
என் உள்ளம் முழுவதிலும் நீ வெள்ளை அடித்தாயே
நீ மலரில் பிறந்தவளா இல்லை நிலவில் வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு ஒரு ஜன்னல் திறந்தவளா
அட இன்னும் தெரியலையா நான் உந்தன் துணை இல்லையா
(அடி..)
ஒரு சிற்பியில் முத்தை போல் என்னை மூடிக்கொள்வாயா
உன் அழகில் தொலைந்தவனை நீ தேடித் தருவாயா
உன் கனவில் நனைகின்றேன் நீ குடைகள் தருவாயா
நான் கொஞ்சம் தூங்குகிறேன் நீ தலையணை ஆவாயா
நீ காதல் ஓவியனா ஒரு கவிதை நாயகானா
நான் தேடும் மன்மதனா என் அழகின் காவலனா
அட போதும் அம்மம்மா நாம் கைகள் இணைவோமா
(அடி..)
படம்: மேட்டுக்குடி
இசை: சிற்பி
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
பதிந்தவர் MyFriend @ 1:03 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
Saturday, November 27, 2010
அன்புள்ள மன்னவரே ஆசை காதலனே
Get Your Own Hindi Songs Player at Music Plugin
அன்புள்ள மன்னவரே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவரே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா
கிளியே கிளியே போ தலவனை தேடி போ
முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளிப்போ
தனிமையில் கண்ணீரை கண்களில் ஏந்திப்போ
(அன்புள்ள..)
வா வா கண்ணா என்றே கெஞ்சிக் கேட்க போ போ
வாசல் பார்த்து வாழும் வாழ்வை சொல்ல போ போ
இளமை உருகும் துன்பம் இன்றே சொல்ல போ போ
நிதமும் இதயம் ஏங்கும் நிலமை சொல்ல போ போ
கிளியே கிளியே போ போ
காதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ
மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ள போ
நடந்ததை மறந்திட சொல் உறவினில் கலந்திட சொல்
மடியினில் உறங்கிட சொல்
கண்கள் தேடுது திருமுகம் காண
(அன்புள்ள..)
வந்தேன் என்று கூற வண்ணக் கிளியே போ போ
வாசமல்லிப் பூவை சூட்டச் சொல்லு போ போ
இதயம் இணையும் நேரம் தனிமை வேண்டும் போ போ
உந்தன் கண்கள் பார்க்க வெட்கம் கூடும் போ போ
கிளியே கிளியே போ போ
நித்தம் பலநூறு முத்தம் கேட்க போ
சத்தம் இல்லாமல் ஜன்னல் சாத்தி போ
விழிகளில் அமுத மழை இனி ஒரு பிரிவு இல்லை
உறவுகள் முடிவதில்லை
கங்கை வந்தது நெஞ்சில் பாய
(அன்புள்ள..)
படம்: மேட்டுக்குடி
இசை: சிற்பி
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
பதிந்தவர் MyFriend @ 1:08 AM 1 பின்னூட்டங்கள் Links to this post
Friday, November 26, 2010
எங்கேயும் காதல் - நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ
(நெஞ்சில்..)
என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்
(நெஞ்சில்..)
ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்
உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த
(நெஞ்சில்..)
பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க
(நெஞ்சில்..)
படம்: எங்கேயும் காதல்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி
வரிகள்: மதன் கார்க்கி
பதிந்தவர் MyFriend @ 1:04 AM 1 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2010, சின்மயி, மதன் கார்க்கி, ஹரிஷ் ராகவேந்திரா, ஹாரிஸ் ஜெயராஜ்
Thursday, November 25, 2010
எங்கேயும் காதல் - லோலிதா ஹா லோலிதா
லோலிதா ஹா லோலிதா
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
லோலிதா ஹா லோலிதா
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
(பொன்மஞ்சள்..)
(லோலிதா..)
கொட்டும் போதே மழை குட்டால் விட்டால் பிழை
வாய்சே வானம் மாற்றி பார்க்கிறாய்
பெண்கள் எல்லாம் செடி பச்சை குள்ளும் கொடி
என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்
நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா
நான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா
என் ஆகாய மதில்கூட பல வென்னிலா
மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்துசென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கம்மாக மாறுதே
(லோலிதா..)
தானாய் வந்தால் ருசி தள்ளி சென்றால் ரசி
என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா
முத்தம் என்றால் சிரி கட்டி கொண்டால் வெறி
கண்ணை மூடி கொண்டு கிள்ளவா
நீ சொல்லும் பல நூறில் நானில்லையே
உன் அழகான பல பூவில் தேன் இல்லையே
உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் புறம்பில்லையே
நீ ருசி பார்க்க தலை தாய்த்தும் வரம்பில்லையே
ஓ (லோலிதா..)
படம்: எங்கேயும் காதல்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், பிரஷாந்தினி
வரிகள்: தாமரை
பதிந்தவர் MyFriend @ 1:51 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2010, கார்த்திக், தாமரை, பிரஷாந்தினி, ஹாரிஸ் ஜெயராஜ்
Wednesday, November 24, 2010
காதல் பொன்னேடு கண்கள் மைகூடு
படம்: கலியுக கண்ணன்
பாடியவரகள்: டி.எம்.சவுந்திரராஜன், பி.சுசீலா
பாடலாசிரியர்: வாலி
இசை: வி.குமார்
|
காதல் பொன்னேடு கண்கள் மைகூடு
இன்பம் என்னும் பண் பாட இன்னேரம் நீவா
நான் தமிழ் எனும் பென்னாக
தலைவா உன் கண்ணாக
இருகின்ற நேரம் இன்பம் ஆயிரம் (காதல்)
அன்று கோவலன் ஆடிய நகரம்
அவன் நாயகி அழகின் சிகரம்
அவன் தேவியும் நானும் ஒன்று
இந்த தெய்வீகம் வேரெங்கு உண்டு
சிற்பம் சொல்லும் சாட்சி இது
இளங்கோ காணாத காட்சி இது (காதல்)
நல்ல பாரதி தாசனின் கவிதை
சொல்லும் பில்காணன் யாமினி சரிதை
இங்கு நீயென நான் என வந்து
சொல்லும் ஆயிரம் தேன் தமிழ் சிந்து
சந்தம் கொஞ்சும் பாடல் இது
மன்மத ரதி தேவி கோயில் இது (காதல்)
பதிந்தவர் Covai Ravee R @ 1:39 PM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை P சுசீலா, TM சௌந்தர்ராஜன், வாலி
ப்யூடிபுல், மார்வலஸ், எக்ஸலண்ட்

படம்: மனம் ஒரு குரங்கு
பாடியவர்கள்:சீர்காழி கோவிந்தராஜன். எல்.ஆர்.ஈஸ்வரி
இசை:டி.பி.ராமச்சந்திரன்
ப்யூடிபுல், மார்வலஸ், எக்ஸலண்ட்
வெரி வெரி எக்ஸலண்ட்
நாம் பிறந்திருக்க வேண்டியது இங்லாண்ட்
இளமைப் பொங்க அள்ளித்தந்த நானும் ஒரு பெண்
நீ தட்டி கழித்த பேர்களிலே ஆயிரத்தில் ஒருவன்
இன்பக் கடலில் நீந்திட வந்த படகோட்டி
இனி என்றும் வாழ்வில் நீயே எனக்கு வழிக்காட்டி
ப்யூடிபுல், மார்வலஸ் எக்ஸலண்ட்
வெரி வெரி எக்ஸலண்ட்
நாம் பிறந்திருக்க வேண்டியது இங்லாண்ட்
கல்யாணம் என்ற செர்மனி
அது காதலர்க்கு தரும் கம்பெனி
குழந்தை குட்டிகள் டூ மெனி
பெறக்கூடாது அம்மணி
ப்யூடிபுல், மார்வலஸ் எக்ஸலண்ட்
வெரி வெரி எக்ஸலண்ட்
நாம் பிறந்திருக்க வேண்டியது இங்லாண்ட்
மீட்டரை போல ஓடுது இருவர் உள்ளம்
அதை தடுத்து நிறுத்தக் காட்டுவோம் நாம்
நெஞ்சில் ஓர் ஆலயம்
வண்டிகட்டி உன்னைத் தேர்ந்தெடுத்து
நான் போட்டேன் பூமாலை
இளமங்கை உன்னை எனக்கு
காதலிக்க நேரமில்லை
காதலிக்க நேரமில்லை
|
பதிந்தவர் Covai Ravee R @ 1:00 PM 0 பின்னூட்டங்கள் Links to this post
எங்கேயும் காதல் - எங்கேயும் காதல்
எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..
கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே
எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே ..
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..
எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..
படம்: எங்கேயும் காதல்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஆலாப் ராஜு
வரிகள்: தாமரை
பதிந்தவர் MyFriend @ 1:35 AM 1 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2010, ஆலாப் ராஜு, தாமரை, ஹாரிஸ் ஜெயராஜ்
Tuesday, November 23, 2010
கற்றருந்த தென்றலே காலை நேர தென்றலே
கற்றருந்த தென்றலே காலை நேர தென்றலே
கொண்டு வந்த பாடல் என்ன பாடு
கண் விழித்த பூக்களே கண் விழித்த பூக்களே
பாடுகின்ற தென்றலோடு ஆடு
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு
(கற்றருந்த..)
தண்ணிக்குள்ளே கெண்டை மீன்கள் துள்ளும் போதிலே
கை வளயல் ஓசை வளையல் ஓசை கேட்டதில்லையா
நீ கேட்டதில்லையா நீ கேட்டதில்லையா
வந்து வந்து பாடுகின்ற பாடல் கேட்கையில்
இளம் பூக்களுக்கு புல்லரிக்கும் பார்த்ததில்லையா
நீ பார்த்ததில்லையா நீ பார்த்ததில்லையா
பாறைக்குள்ளும் தேரை உண்டு கேட்டதில்லையா
பூமிக்குள்ளும் பாடல் உண்டு உண்மை இல்லையா
காற்று மண்டலம் வாசல் ஆனது
மூச்சிழுக்கும் போது பாட்டு உள் நுழைந்தது
(கற்றருந்த..)
மேற்கு வானம் மஞ்சள் பூச பாட்டு வந்தது
என்னை மெல்ல மெல்ல தென்றல் தீண்ட பாட்டு வந்தது
புது பாட்டு வந்தது பாட்டு வந்தது
மொட்டு விட்ட பூவைப் பார்த்து பாட்டு வந்தது
குளிர் தீண்ட தீண்ட குளிக்கும் போது பாட்டு வந்தது
பாட்டு வந்தது முழு பாட்டு வந்தது
ஜன்னல் ஓரம் நிலவு பார்த்து பாட்டு வந்தது
சலசலக்க மழை அடிக்க பாட்டு வந்தது
மேடை ஏறவும் மாலை சூடவும்
பாடி பாடி பார்ப்பதில்லை பாட்டு என்பது
(கற்றருந்த..)
படம்: கண்ணன் வருவான்
இசை: சிற்பி
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
பதிந்தவர் MyFriend @ 1:01 AM 1 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2000's, சங்கர் மகாதேவன், சிற்பி
Monday, November 22, 2010
மாமா நீ மாமா
Get Your Own Hindi Songs Player at Music Plugin
மாமா நீ மாமா
புத்தம் புது பாட்டு
கேட்டு நீ ஏட்டு
பந்த பாசம் காட்டு
குயிலுக்கு வாத்தியாரு நான்
(மாமா நீ..)
நான் பாடப் பாட ஊரே தூங்காதா ஹோ
நீ பாடி பாரு மூச்சு வாங்காதா ஹோ
எட்டு கட்டை ஏறி பாடுவேன்
(மாமா நீ..)
நேற்று என் வானம் மழை தர வில்லை
ஏனோ என் தோப்பில் குயில் வர வில்லை
வானவில் இருந்தும் வண்னங்கள் இல்லை
பூக்கள் இருந்தும் புன்னகை இல்லை
அரண்மனை வாசல் தாண்டி நான்
அன்புக்கு ஏங்கினேன்
உன்னிடம் சேர்ந்த பின்புதான்
சொர்கத்தை வாங்கினேன்
எனக்கிந்த சொந்தம் போதுமே ஆ
(மாமா நீ..)
எனக்கொரு துணையாய் உனைத்தான் நினைத்தேன்
நினைத்ததை முடித்து உன்னிடம் ஜெயிப்பேன்
நிழலினை போலே உன்னுடன் நடப்பேன்
உயிருக்குள் உன்னை சுகமாய் சுமப்பேன்
இதுவரை வாழ்ந்த வாழ்விலே
கனவுகள் இல்லையே
இனி எந்தன் பாதை யாவிலும்
நீதான் எல்லையே
நீ இன்றி சொந்தம் இல்லையே ஆ
(மாமா நீ..)
படம்: உள்ளத்தை அள்ளித்தா
இசை: சிற்பி
பாடியவர்: கீதா சபேஷ், மனோ
பதிந்தவர் MyFriend @ 1:43 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1990's, கீதா சபேஷ், சிற்பி, மனோ
Sunday, November 21, 2010
வார்த்தை தவறி போனதனாலே
Get Your Own Hindi Songs Player at Music Plugin
வார்த்தை தவறி போனதனாலே
வாழ்க்கை தவறி போனது பாரு
நேற்று பொழுது திரும்ப வராது
அதற்கு பூமி அனுமதிக்காது
பூவை பெண்ணாய் சொன்னவன் யாரு
மலரை அறுத்து மருத்துவம் பாரு
வானம் தொலைவா
இல்லை வாழ்க்கை தொலைவா
இங்கு வாழும் மனிதா
உண்மை புரியலையே
(வார்த்தை..)
மின்னலுக்கும் மின்மினிக்கும் தகறாரா
கண் இருக்கு கன்னங்கள் தான் வரலாறா
பூக்கள் எல்லாம் சந்தேகித்தால் சருகாகும்
போதிமரம் கூட இங்கு விறகாகும்
இறைவனை ஒரு முறை வர வழைத்து
இல்லறம் நடத்திட சொல்ல வேண்டும்
மங்கையரின் மனதை கண்டு பிடிக்க
மற்றும் ஒரு கோலம்பஸ் இங்கு வேண்டும்
முதல் முறையா இல்லை முடிவுறையா
கரையே இல்லாத கடற்கரையா
வானம் தொலைவா
இல்லை வாழ்க்கை தொலைவா
இங்கு வாழும் மனிதா
உண்மை புரியலையே
படம்: சார்லி சப்ளின்
இசை: பரணி
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா
பதிந்தவர் MyFriend @ 1:46 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2000's, பரணி, ஹரிஷ் ராகவேந்திரா
Saturday, November 20, 2010
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
Get Your Own Hindi Songs Player at Music Plugin
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா
திரும்ப திரும்ப கடிதம் போட்டு
திரும்ப திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை கொல்லும்
நினைவு காதலா
இமைக்கும்போது உன் முகம்
தெரிவதில்லை வாடினேன்
இமைகள் ரெண்டும் உயிரை கொல்லும்
நினைவு காதலா
உயிரை கொண்டு உன்னை மூடினேன் ஆ...
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா
உந்தன் மனம் சேலையாய்
காற்று கொண்டு போனதோ
காற்று கொண்டு போனதை
மேகம் வாங்கி கண்டதோ
வாங்கி கொண்ட சேலைதான்
வானவில் ஆனதோ
முத்தம் வைத்து கொல்வதை
வானம் என்னை எண்ணுதோ
எண்ணி வைத்த புலிகள்
நட்சத்திரம் ஆனதோ
உந்தன் பேரை சொல்வதில்
கோடி இன்பம் கூடுதோ
காதலித்து பார்க்கையில்
இதயம் நின்று போகுமே
இதயம் நின்று போயிடும்
ரத்த ஓட்டம் ஓடுமே
பிறப்பு போல இறப்பு போல
ஒரு முறைதான் காதல் தோன்றுமே ஆ
(திரும்ப..)
கவிஞன் மனச போல நீ
துருவி துருவி பார்க்கிறாய்
கிராம மண்ணின் தென்றலாய்
உரசி உரசி கேட்கிறாய்
இந்த பெண்மை ஆண்மை
உன்னை எண்ணி ஈர்க்குது
மேஜை விளக்கு போல நீ
தலை குனிந்து போகிறாய்
ஓடை கால மேகமாய்
கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்
இந்த தனித்தாண்டி
என்னை உன்னை கோர்த்தது
இதய துடிப்பு என்பதே
நிமிஷத்துக்கு என்பது
உன்னை பார்க்கும்போதுதான்
நூறு மடங்கு கூடுது
வெட்கம் பாதி சொர்க்கம் பாதி
மாறி மாறி வந்து போனது ஆ
(திரும்ப..)
படம்: பார்வை ஒன்றே போதுமே
இசை: பரணி
பாடியவர்கள்: ஹரிணி, உன்னி கிருஷ்ணன்
பதிந்தவர் MyFriend @ 1:14 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2000's, உன்னி கிருஷ்ணன், பரணி, ஹரிணி
Friday, November 19, 2010
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
Get Your Own Hindi Songs Player at Music Plugin
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா
சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு
பார்க்கிற பார்வையை மறந்துவிடு
பேசுற பேச்சை நிறுத்திவிடு
பெண்ணே என்னை மறந்துவிடு
உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு என்னை வாழ விடு
கண்கள் மோதலாம் இது வந்த காதலா
நினைத்தேனே நான் நினைத்தேனே
ஊசி தூரலால் நீ பேசு காதலா
தவித்தேனே நான் தவித்தேனே
காற்றாய் மாறி காதலிக்கிறேன்
என்றே இங்கொரு வார்த்தை சொல்
மன்னவனே மன்னவனே
உயிரில் உயிராய் கலந்தவனே
நேற்று பொழுதிலே நான் கண்ட கனவல்ல
பார்த்தேனே உன்னை பார்த்தேனே
காதல் வயசிலே நான் ஏதோ நினைப்புல
துடித்தேனே நான் துடித்தேனே
இதயத்தோடு இதயம் சேர்த்து
ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்
கண்களோடு கண்கள் வைத்து
ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்
கண்களோடு கண்கள் வைத்து
வாழ்வே உனக்கென வாழ்கிறேனே
படம்: பார்வை ஒன்றே போதுமே
இசை: பரணி
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, சித்ரா
பதிந்தவர் MyFriend @ 1:21 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2000's, சித்ரா, பரணி, ஹரிஷ் ராகவேந்திரா
Thursday, November 18, 2010
ஏ அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
ஏ அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா காதலா
ஏ அலையாடும் கடலுக்கும் அது சேறும் அணலுக்கும்
காதலா காதலா
கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்
மொத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்
சட்சைகள் செய்திடவா
(ஏ அசைந்தாடும்...)
ஏ தீப்போன்ற உன் மூச்சோட
என் தோள் சேறு
உச்சவம் போது உச்சியை கோது
என் வாயோடு உந்தன் வாய் சேர்த்து
உந்தன் மார்போடு மெல்ல பூர்பார்த்து
கைகளில் ஏந்து வைகையில் நீந்து
நான் வேர் வேராய் அட வேர்த்தேனே
ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே
சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது
பேரின்பத்தால் மறைத்தால் திறக்க
ஐந்தடி உடல் நீலை மெய் மறக்க
(ஏ அசைந்தாடும்..)
நீ ஆராய்ச்சி இனி பண்ணாதே
என் பூந்தேகம் அதை தாங்காதே
கொப்புழில் தாகம் பொன் கைகள் வேகம்
உன் கண் கொண்டு என்னை கொய்யாதே
உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு வித்தைகள் காட்டு
நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே
நீ மேல் கீழாய் என்னை எள்ளாதே
பெண்ணே நீ பெண் அல்ல அட்சைய பாத்திரம்
பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்
ஆளோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்
(ஏ அசைந்தாடும்..)
படம்: பார்வை ஒன்றே போதுமே
இசை: பரணி
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், S ஜானகி
பதிந்தவர் MyFriend @ 1:04 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2000's, S ஜானகி, உன்னி கிருஷ்ணன், பரணி
Wednesday, November 17, 2010
மன்னவா மன்னவா
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும்தேனோ மரகத வீணை தானோ
மடிமேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ
ஒ... மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நாள்தோறும் காவல் நின்று நம்மை காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
ராஜாதிராஜன் இன்று பல தேசம் நீயும் வென்று
வர வேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென் மதுரை சீமை எல்லாம் அரசு ஆளும் உன்னை கண்டு
திரு தோளில் மாலை சூடும் மகாராணி யாரோ இங்கு
ஒளி விடும் எதிர்காலம் உண்டு உருவாகும் நாளை இங்கு
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மீனாட்சி கையில் கொண்டு அருள் கூறும் பிள்ளை ஒன்று
உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கொண்டு சூடர் வீசும் தெய்வம் ஒன்று
எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம்
விழியோரம் நீரை கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்
உனக்கு ஒரு குறை நேர்ந்திடாது வளர்ப்பேனே தோளின் மீது
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும்தேனோ மரகத வீணை தானோ
மடிமேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ
ஒ... மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
படம் : வால்டர் வெற்றிவேல் (1993)
இசை : இளையராஜா
பாடியவர் : உமா ரமணன்
வரிகள் : வாலி
பதிந்தவர் நாகை சிவா @ 1:44 PM 0 பின்னூட்டங்கள் Links to this post
தூங்காத விழிகள் ரெண்டு
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது
(தூங்காத..)
மாமர இலை மேலே ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேறும் நேரம் தீரும் பாரம்
(தூங்காத..)
ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விலங்காத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
(தூங்காத..)
படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி
பதிந்தவர் MyFriend @ 1:31 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1990's, KJ ஜேசுதாஸ், S ஜானகி, இளையராஜா
Tuesday, November 16, 2010
ரோஜப்பூ ஆடிவந்தது
ரோஜப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா
(ரோஜாப்பூ..)
நேற்று நீர் விட்டது
இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ
நூறு பூ பூத்தது
சின்னஞ்சிறு பருவம்
இன்னும் கோதிப்போ
சொல்லி சொல்லி பொழுதை
இன்னும் கழிப்பதோ
தொடு தொடு தொடாமல்
நிலாவின் மேனி நாளெல்லாம்
தனிந்தது
(ரோஜாப்பூ..)
நீயும் அச்சம் இடு
நூறு முத்தம் இடு
மீதம் மிச்சம் எடு
மேலும் சொல்லிக்கொடு
அந்தி பகல் இரவு
சிந்தை குளிர்ந்தது
அந்தப்புறா நினைவில்
சிந்து படிக்குது
இதோ இதோ உன்னாலே
விழாமல் மோகம் வாட்டுது
தாங்குமா
(ரோஜாப்பூ..)
படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
பதிந்தவர் MyFriend @ 1:35 AM 2 பின்னூட்டங்கள் Links to this post
Monday, November 15, 2010
வா வா அன்பே அன்பே
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா..)
நீலம் கொண்ட கண்ணும்
மேகம் கொண்ட நெஞ்சும்
காலம்தோரும் என்னை சேறும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மனி
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது பூ வைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா..)
கண்ணன் வந்து கொஞ்சும்
கட்டில் இந்த நெஞ்சம்
காணல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும்
உந்தன் கையில் தஞ்சம்
கண்கள் தீரும் காதல் பேசும் ஓவியம்
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது எந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது எந்தன் தஞ்சமானது
உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா..)
படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், சித்ரா
பதிந்தவர் MyFriend @ 1:40 AM 2 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1990's, KJ ஜேசுதாஸ், இளையராஜா, சித்ரா
Sunday, November 14, 2010
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை
(ஆயிரம்..)
ஓ கொத்துமலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
ஓ கொத்துமலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளை குடிக்கும்
(ஆயிரம்..)
ஏ வீட்டுக்கிளியே
கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்றையொன்று சூடும் இது பொன் மேடை
கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்
ஆயிரம் தாமரை
(ஆயிரம்...)
படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
பதிந்தவர் MyFriend @ 1:49 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1980's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Saturday, November 13, 2010
காதல் ஓவியம் பாடும் காவியம்
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் ஓ
(காதல்..)
தேடினேன் ஓ என் ஜீவனே
தென்றலிலே மிதந்தது வரும் தேன் மலரே
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்
(காதல்..)
தாங்குமோ ஓ என் தேகமே
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
மோகம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோவில் கண்கள் தீபம் பூஜை காணலாம்
(காதல்..)
படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 1:52 AM 1 பின்னூட்டங்கள் Links to this post
Friday, November 12, 2010
வாடி என் கப்பங்கிழங்கு
ஓய் கிறுக்கு பசங்களா
பெரிய மனுஷன் சொல்றேன் கேளுங்கடா
இந்த பாட்டெல்லாம் நமக்கு வேணாம்
அக்காவை பத்தி அக்கா மேல ஒரு பாட்டெடுத்து விடுங்கடோய்
அக்கா மேலையா
ஆ வாடி என் கப்பங்கிழங்கு
எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
அடி வாடி அடி வாடி அடி வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாயே வாய தொறந்து
வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாயே வாய தொறந்து
வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாயே வாய தொறந்து
அடி கூடு கட்டுற குயிலே
புது மேடை கட்டுற மயிலே
அடி வேப்ப மரத்து வெயிலே
பல வேஷம் கட்டுற ஒயிலே
உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது
வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாயே வாய தொறந்து ஹேய்
சரஸ்வதி இவளோட திருவாயில்
திருவாயில் குடியேறி இருக்காங்கடா
மட பசங்க இவ படிச்சா அவ தவிப்பா
ஆறு கடல் வத்தி அடங்கும் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஆறு கடல் வத்தி அடங்கும் எங்க அக்கா மக வாய் தொறந்தா
ஆறு பொன்னி கொட்டம் அடங்கும்
வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாயே வாய தொறந்து
கழுத கூட நல்லா பாடும் கேட்டு பாரு உனக்கு புரியும்
அதுக்கு கூட இவங்க பாட கத்துக்கொடுக்கும் வாத்தியாரு
இவங்க பாடுனா நல்லா இல்ல கேட்டு பாருடா கழுத தேவல
அட அதுக்கெல்லாம் ஞானம் வேணும் ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய்
ஞானமா அட நம்ம ஞானபிரகாசம் டேய் ஞானபிரகாசம்
இங்கே ஓடி வாடா கூப்பிடுறாங்க
ஒரு கழுத ஆ
ஒரு கழுத வயசாச்சி மரியாதை துளி கூட கொடுக்காதது
மனசுக்குள்ளே மலை அளவு திமிரு இருக்கு
ஸ்டுபிட்
ஏபிசிடி ந்க்கொப்பன் தாடி டோஇ ஹோய் ஹோய்
ஏபிசிடி ந்க்கொப்பன் தாடி டோய் நீ வந்தா வாடி வராட்டி போடி
ஈ அடிச்சான் காப்பி அடிடோய்
வாடி அடி வாடி
வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாயே வாய தொறந்து
அடி கூடு கட்டுற குயிலே
புது மேடை கட்டுற மயிலே
அடி வேப்ப மரத்து வெயிலே
பல வேஷம் கட்டுற ஒயிலே
உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது
வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாயே வாய தொறந்து
படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பாஸ்கர், கங்கை அமரன், இளையராஜா, ஜென்ஸி
பதிந்தவர் MyFriend @ 1:03 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1980's, இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர், ஜென்ஸி
Thursday, November 11, 2010
ஊரெல்லாம் சாமியாக
ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ
ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ
வண்ணக்கிளியே சொல்லு கிளியே
வண்ணக்கிளியே சொல்லு கிளியே
ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமே
வண்ணக்கிளியே சொல்லு கிளியே
வண்ணக்கிளியே சொல்லு கிளியே
ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ
தெய்வம் வரும் மனித உருவிலே படித்ததுண்டு ஏட்டிலே
தெய்வம் என்று தெரிந்த போதிலே பூட்டலாமோ வீட்டிலே
பூஜை செய்யும் தேவி உன்மேல் ஆசை வைத்தால் பாவம்
நானும் உன்னை தாரம் என்று ஏற்றுக்கொண்டால் துரோகம்
ஜீவன் உள்ள வான் நிலாவை நானும் சேரக் கூடுமோ
பாவம் இந்த பாவம் என்று காலம் என்னை தூற்றுமோ
(ஊரெல்லாம்..)
தெய்வம் கண நேரம் என் மேல் வந்து பேசி போகுது
வந்து பேசி போவதால் நான் தெய்வம் ஆக கூடுமோ
ஊரில் உள்ள பேருக்கெல்லாம் வாக்கு சொல்லும் பாவை
உன்னிடத்தில் கேட்டு நின்றாள் வார்த்தை ஒன்று தேவை
என்னை தெய்வம் என்றால் எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான்
தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு வாழ்க்கை ஒன்றை நீ கொடு
படம்: தெய்வ வாக்கு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜெயசந்திரன், S ஜானகி
பதிந்தவர் MyFriend @ 1:49 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1990's, S ஜானகி, இளையராஜா, ஜெயசந்திரன்
Wednesday, November 10, 2010
வனமெல்லாம் சென்பகப்பூ
வனமெல்லாம் சென்பகப்பூ
வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
(வனமெல்லாம்..)
நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமிதானே காப்பு
நாமெல்லாம் தெய்வ படைப்பு
(வனமெல்லாம்..)
ஆத்தோரம் பூங்கரும்பு
காத்திருக்கும் சிறு எறும்பு
அக்கரையில் ஆயிரம் பூ பூ
பூத்திருக்கு தாமரைப்பூ
பொன்னிரத்து கால் சிலம்பு
புத்தம் புது பூஞ்சிரிப்பு மத்தாப்பு
எப்போதும் மாராப்பு
எடுப்பான பூந்தோப்பு
என்ன என்ன எங்கும் தித்திப்பு
ஒட்டாத ஊதாப்பு
உதிராத வீராப்பு
வண்ண வண்ண இன்பம் ரெட்டிப்பு
வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு
புது தொகுப்பு வகுப்பு கனக்கெடுப்பு
(வனமெல்லாம்..)
கெட்டவர்க்கு மனம் இரும்பு
நல்லவரை நீ விரும்பு
எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு
ஏழைகளின் நல்லுழைப்பு
என்ன இங்கு அவை பிழைப்பு
வாழ்வு வரும் என்று எதிர்ப்பார்ப்பு
வீணாக இருக்கும் வம்பு
வினையாகும் கைகலப்பு
விட்டு விடு சின்ன தம்பி ஏய்ப்பு
கைய்யோடு எடு சிலம்பு
கலந்தாட நிமிர்ந்தெழும்பு
கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு
விருவிருப்பு இருக்கு சுறுசுறுப்பு
(வனமெல்லாம்..)
படம்: நாடோடி பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பதிந்தவர் MyFriend @ 1:44 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Tuesday, November 9, 2010
ப்ரியசகி ஓ ப்ரியசகி
Get Your Own Hindi Songs Player at Music Plugin
ப்ரியசகி ஓ ப்ரியசகி ப்ரியசகி என் ப்ரியசகி
வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி
இளைய தேகம் ஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓ புணைய வேண்டும்
(ப்ரியசகி..)
காதலன் வீரமிகு ஆண்மகன் ஆண்மகன்
காவலை மீறிவரும் நாயகன் நாயகன்
பார்வை ஒன்று வீசு கண்மணி பூமி தன்னைக் கையில் ஏந்துவேன்
வார்த்தை ஒன்று பேசு கண்மணி மேகம் போல வானில் நீந்துவேன்
வானமும் வையமும் வாழ்த்துமே ஓ
(ப்ரியசகி..)
கூண்டிலே காதல் குயில் வாடுது பாடுது
கொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுது
கூண்டிலே காதல் குயில் வாடுது பாடுது
கொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுது
வெண்ணிலாவை சிறையில் வைப்பதா
வானம் என்ன வெளியில் நிற்பதா
வீரமான நெஞ்சமில்லையா நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா
நீ வரும் பாதையைப் பார்க்கிறேன் ஓ..
(ப்ரியசகி..)
படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி
பதிந்தவர் MyFriend @ 1:10 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
Monday, November 8, 2010
வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்
அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கட்டி வேணும்
தல வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததிகின ததிகின ததிகின தகத்தோம்
(வீட்டுக்கு..)
அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டும்
அதில் முத்து எடுப்பவன் கஷ்டம்
இந்த ஊருக்கு தெரியாது
உள் மனசுல ஆயிரம் பாரம்
அது பாட்டுல ஓடிடும் தூரம்
இது யாருக்கும் புரியாது
ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல
ஆணில்லாம பெண்ணும் இல்ல
துன்பம் இல்ல பேரும் இல்ல
வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததிகின ததிகின ததிகின தகத்தோம்
(வீட்டுக்கு..)
புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு
ரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு
என்றும் வாழணும் பல்லாண்டு
ஒரு மல்லிகை மெத்தையை பாரு
அந்த மன்மதன் வித்தையை காட்டு
நான் கேட்கணும் தாலாட்டு
ஆடை இல்லாத உடலும் இல்ல
அலையும் இல்லா கடலும் இல்ல
ஓசை இல்லா மணியும் இல்ல
பாசம் இல்லா மனசும் இல்ல
வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததிகின ததிகின ததிகின தகத்தோம்
(வீட்டுக்கு..)
படம்: கிழக்கு வாசல்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா
வரிகள்: RV உதயகுமார்
பதிந்தவர் MyFriend @ 1:19 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1990's, RV உதயகுமார், இளையராஜா
Sunday, November 7, 2010
காதலிக்கும் பெண்களுக்கு
Get Your Own Hindi Songs Player at Music Plugin
காதலிக்கும் பெண்களுக்கு
கைகள் கூட ரெக்கை ஆகும்
மாயம் இன்று கண்டேன்
கத்தி இன்றி ரத்தம் இன்றி
போர் தொடுக்கும் உந்தன் கண்ணில்
என்னை தேடுகின்றேன்
கர்ரெண்டு கூட தாவும்
கைகள் படுவதால்
மிரண்டு போகுதே
மேனி சுடுவதால்
பாலக்காட்டு நாயர் கடை
பன்னு போல கன்னமோ
(காதலிக்கும்..)
மின்னல் வார்த்தை பேசி பேசி
மேக்-அப் போட வந்த வெண்ணிலா
மேகல் போல தொட்டு கொள்ளவா
அம்பு வீசும் கண்கள் ரெண்டும்
வாலிபத்தை காட்டும் ஜன்னலா
ஓ வட்டமான லோக்கல் மன்மதா
ரோமியோ வாரிசின் கொள்ளு பேரா
மாறுதே உந்தன் கை செல்லுலாரா
காதலே காதலே
தேவதை கூட்டத்தில்
உன்னைப்போல பெண் இல்லே
(காதலிக்கும்..)
கண்கள் என்ன மூக்கின் மேலே
வால்க் போக வந்த மீன்களா
தேக்கி வைத்த பொதிகை தென்றலா
நியூச்பேப்பர் போல என்னை
நீ படிச்சு பார்க்க ஓடி வா
தீ புடிச்சு நெஞ்சை தேய்க்க வா
ஹாட்டலு பார்க்குன்னு போகலாமா
டோட்டலா வாழ்க்கையை மாற்றலாமா
காதலே காதலே
தேவதை கூட்டத்தில்
உன்னைப்போல பெண் இல்லே
(காதலிக்கும்..)
படம்: குபேரன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன்
பதிந்தவர் MyFriend @ 1:28 AM 2 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2000's, SA ராஜ்குமார், அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன்
Saturday, November 6, 2010
ஆகாய தாமரை அருகில் வந்ததே
ஆகாய தாமரை அருகில் வந்ததே
நாடோடி பாடலில் உருகி நின்றதே
(ஆகாய..)
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
(ஆகாய..)
மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா இள மயிலே
நீ மந்திரன் போலே மணி தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே
ஒரு மட மாது இணை பிரியாது
இருக்குமோ மறக்குமோ
ஒரு பொழுதென்னும் அருவியை மீனும்
பிரியுமோ விலகுமோ
என்று இந்த லீலை எல்லாம்
எல்லை தாண்டி போவது
கையில் ஏந்தும் போதெல்லாம்
கன்னி போகும் பூவிது
முத்தம் தலைவன் இதழ் பதித்திட
இதயம் தித்தித்திட
புதிய மது ரசம் வாழ்ந்திட
(ஆகாய..)
புன்னகை முல்லை புது விழி குவளை
அழகிய ஆதாரங்கள் அரவிந்த பூவோ
உந்தன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அள்ளி
நிரத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூ
செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு
எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும் குறிஞியும் இங்கே
குமரியை விளைந்ததோ
மின்னும் வண்ண பூக்கள் எல்லாம்
மாலையாக ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன்
நெஞ்சை தொட்டு ஆடலாம்
நெஞ்சை தழுவியது துலங்கிட
உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்ததடா
(ஆகாய..)
படம்: நாடோடி பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, S ஜானகி
பதிந்தவர் MyFriend @ 1:37 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
Friday, November 5, 2010
கோகுலத்து கண்ணா கண்ணா
என் நாவினில் இருப்பது சரஸ்வதியே
என்னை பாட வைப்பது கணபதியே
கோகுலத்து கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானுமில்லை ராமனுமில்லை
கோகுலத்தில் நானா
சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை
ராவணின் நெஞ்சில் காமமில்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
ஆசைக்கொரு ஆளானவன்
ஆனந்தத்தில் கூத்தானவன்
கோபியர்கள் நீராடிட
கோலங்களை கண்டானவன்
ஆசை அள்ளி கொண்டானவன்
அழகை அள்ளி தின்றானவன்
போதையிலே நின்றானவன்
பூஜைக்கின்று வந்தானவன்
அவன் உலா உலா தினம் தினம் பாரீர்
தினம் விழா விழா விழா வாழ்க்கையில் தேவை
கண்ணா உன்னை நாள் தோறுமே
கை கூப்பியே நான் பாடுவேன்
(கோகுலத்து..)
ஆசைக்கொரு ஆளாகினான்
கீதை என்னும் நூலாகினான்
யமுனை நதி நீராடினான்
பாண்டவர்க்கு போராடினான்
ஆடை அள்ளி கொண்டாடினான்
த்ரௌபதிக்கு தந்தாடினான்
பெண்களுடன் கூத்தாடினான்
பெண்ணை கண்டு கை கூப்பினான்
ஒரு நிலா நிலா நிலா நிலா
வந்தது நேரில்
திருவிழா விழா விழா ஆனது வீடே
என் வாழ்க்கையே பிருந்தாவனம்
நானாகவே நான் வாழ்கிறேன்
கோகுலத்து கண்ணா கண்ணா
லீலை விடுவாயா
கோகுலத்தில் சீதை வந்தால்
நீயும் வருவாயா
ஆயிரம் பேர் உன்னை காதலித்தார்
ருக்மணியை நீ கை பிடித்தாய்
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே ஹரே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே
இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே
படம்: கோகுலத்தில் சீதை
இசை: தேவா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
பதிந்தவர் MyFriend @ 1:58 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், சித்ரா, தேவா
Thursday, November 4, 2010
வீணஸ் வீணஸ் பெண்ணே
வீணஸ் வீணஸ் பெண்ணே
கோல்டன் ஃபிஷ் கண்ணாலே
நீ என்னை மிதக்க வைத்தாயே
மைனஸ் மைனஸ் டிக்ரீ
ஐஸ் கட்டி கிஸ் ஆலே
நீ என்னை சிரிக்க வைத்தாயே
(வீணஸ்..)
ஹேய் லண்டன் பாரிஸ் பெண்கள் உன்போல் இல்லையே
பிரம்மன் ஓவர்டைமில் செய்த சிலையே
உன் மைக்ரோ இடையை கொஞ்சம் ஸ்கேன்னிங் செய்யவா
என்லார்ஜ் என்லார்ஜ் செய்து பார்க்கவா
(வீணஸ்..)
Yeah Yeah
Come on Check it out
Oh Woh Oh
Yeah Yeah
Come here Check it out
Oh Woh Oh
Look at it
Yeah I Yeah
Check it Out Come on
COme here baby
Come on
36-28-36-இல
இதுப்போல ஒரு ஸ்ட்ரக்சுர்
சுக வலியை நான் சொல்ல
ஒரு வார்த்தை இல்லையே
என் கண்ணுக்குள்ளே லேசராய் நுழைபவளே
இந்த செஞ்சுரியை வென்றது உன் அழகே ஹே
(வீணஸ்..)
your mama knew when he'd be breaking it down
slip in the rhythm and the groove of the old school sound
we're talking about this girl
man she looks so fine
one glance and I want to make her mine
I want to see her
and rub her all over
while I please her
Ooh Baby
catch her there
everywhere
all over the place
I ain't Worried 'bout the Springs
I can get them replaced
ah ah voulez-vous couchez avec moi ce soir?
I want it bad girl
like Within the hour
Uh Uh
With that Oomph
he got a bad wheeze
so you better move your butt
Girl
if you want me to please
மஞ்சள் நிற தேகம் என்னை கொஞ்ச சொல்லுதே
செவ்வாய் நிற இதழ்கள் என்னை திங்க சொல்லுதே
முத்தம் உன் முத்தம் என் வெட்கம் தின்னுதே
இளமை உன் இளமை எனை ஏதோ பண்ணுதே
(வீணஸ்..)
படம்: புன்னகை பூவே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: தேவன், ஹரிணி
வரிகள்: பழனி பாரதி
பதிந்தவர் MyFriend @ 1:18 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1990's, தேவன், பழனிபாரதி, யுவன் சங்கர் ராஜா, ஹரிணி
Wednesday, November 3, 2010
அடடட மாமரக்கிளியே ...
அடடட மாமரக்கிளியே
உன்னையின்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னையெண்ணி
பச்ச தண்ணி குடிக்கலையே
அடடட மாமரக்கிளியே ஏஏ
உன்னை நினைச்சே மஞ்சள் அரைச்சேன்
மாசக்கணக்கா பூசிக் குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
(உன்னை நினைச்சே)
அடடட மாதுளங்கனியே
இதை இன்னும் நீ நினைக்கலையே
கிட்டவாயேன் கொத்திப்போயேன்- உன்ன
நான் தடுக்கலையே
மறுக்கலையே (அடடட)
உப்ப கலந்தா கஞ்சி இனிக்கும்
ஒன்னக் கலந்தா நெஞ்சு இனிக்கும்- அட
பரிசம் தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு
(உப்ப கலந்தா)
அடடட தாமரைக்கொடியே
இது ஓந்தோள் தொடவில்லையே
செல்லக்கண்ணு சின்னப்பொன்ணு
இதை நீ நினைக்கலையே
அணைக்கலையே(அடடட)
மீனைப்புடிக்க தூண்டி இருக்கு
நீரைப்பிடிக்க தோண்டி இருக்கு- அட
உன்னைத்தான் நான் பிடிக்க
கண்வலைய போட்டேன்
(மீனைப்புடிக்க)
அடடட மம்முதக்கனையே
வந்து வந்து மயக்குது எனையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம்
பாயைப்போட்டு படுக்கலையே
புடிக்கலையே
(அடடட)
திரைப்படம் : சிட்டுக்குருவி
குரல் : எஸ். ஜானகி
இசை: இளையராஜா
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 10:40 AM 2 பின்னூட்டங்கள் Links to this post
ஓ காதல் என்னை காதலிக்கவில்லை
ஓ காதல் என்னை காதலிக்கவில்லை
ஓ காற்றும் என்னை ஆதறிக்கவில்லை
கண்ணி வெண்ணிலா காத்திருக்கிறேன்
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்றுதான் ஒன்றுதான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
தேவி வான் சொல்லியா மேகம் வரும்
நீ சொல்லியா காதல் வரும்
தேவா நான் கேட்பது காதல் வரம்
நீ தந்தது கண்ணீர் வரம்
பெண்ணழகு முழுதும் கற்பனை என்று உருகி வாழ்கிறேன்
என்னழகு உனது அற்பணம் என்று எழுதி விடுகிறேன்
போதும் போதும் புன்னகை என்பது காதலின் பல்லவி
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஓ என் வானமோ ரெண்டானது நீ சொல்லியே ஒன்றானது
ஓ கள் என்பது பால் ஆனது நான் காணவே நாளானது
என் புடவை உனது கறபனை கேட்டு இடையை மறந்தது
என் விழிகள் உனது கண்களை கண்டு இமையை மறந்தது
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்றுதான் ஒன்றுதான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஓ காதல் உன்னை காதலித்ததம்மா
ஓ காற்றும் உன்னை ஆதறிதததம்மா
கண்ணி வெண்ணிலா கையில் வந்தது
கையில் வந்ததும் காதல் வந்தது
தீயில் வேகும்போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்றுதான் ஒன்றுதான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
பதிந்தவர் MyFriend @ 1:43 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், சித்ரா, ஹம்சலேகா
Tuesday, November 2, 2010
குமுதம்போல் வந்த குமரியே
குமுதம்போல் வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்தது என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ
(குமுதம்போல்..)
நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
பொன் விரல் கண்ட போதும் தினகரனும் புரியும்
நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
பொன் விரல் கண்ட போதும் தினகரனும் புரியும்
இதயத்தின் உயிர் ஓட்டமே
இன்ப உதயத்து மொழி கூட்டமே
இதயத்தின் உயிர் ஓட்டமே
இன்ப உதயத்து மொழி கூட்டமே
என் மனவீட்டின் முழு சாவி நீதானே
முத்தாரமே மணி முத்தாரமே
(குமுதம்..)
பண்பாடும் உன் கைகள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ என்னை மெல்ல உரசு
பண்பாடும் உன் கைகள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ என்னை மெல்ல உரசு
தினத்தந்தி அடிக்கின்றதே
தினத்தந்தி அடிக்கின்றதே
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே
நெஞ்சில் மன மாலை மலரே உன் நினைவெனும்
மணி ஓசையே தினம் மணி ஓசையே
(குமுதம்..)
ரதி என்னும் அழகிக்கும் நீதானே ராணி
கதி நீயே என்னை கொஞ்சம் கண் பாரு தேவி
ரதி என்னும் அழகிக்கும் நீதானே ராணி
கதி நீயே என்னை கொஞ்சம் கண் பாரு தேவி
ஆனந்த விகடன் சொல்லு
என்னை பேர் இன்ப நதியில் தள்ளு
ஆனந்த விகடன் சொல்லு
என்னை பேர் இன்ப நதியில் தள்ளு
நான் வாக்யாதி ப்ரதி ஆனேன் உன்னாலே
கண்ணே உஷா பசும் பொன்னே உஷா
(குமுதம்..)
படம்: மூவேந்தர்
இசை: சிற்பி
பாடியவர்: ஹரிஹரன்
பதிந்தவர் MyFriend @ 1:22 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
Monday, November 1, 2010
காதல் கசக்குதைய்யா வரவர
Get Your Own Hindi Songs Player at Music Plugin
காதல் கசக்குதைய்யா வரவரகாதல் கசக்குதைய்யா
மனம் தான் லவ்வு லவ்வுன்னு அடிக்கும்
லபோன்னு தான் துடிக்கும்
தோத்துப்போனா துடிக்கும்
பைத்தியம் பிடிக்கும்
காதல் கசக்குதைய்யா
வரவர காதல் கசக்குதைய்யா
யாராரோ காதலிச்சி உருப்படல ஒன்னும் சரிப்படல
வாழ்க்கையிலே என்றும் சுகப்படல
காதலை படமெடுத்தா ஓடுமுங்க
தியேட்டரிலே சனம் கூடுமுங்க
தேவதாஸ் அவன் பார்வதி
அம்பிகாபதி அமராவதி கதையைக்கேளு முடிவைப்பாரு
கடைசியில் சேராம வாழாம செத்தாங்க
எனக்கிந்த( காதல் கசக்குதைய்யா)
எத்தனை சினிமா எத்தனை ட்ராமா
பாத்தாச்சு
எத்தனை டூயட் எத்தனை ட்யூனு
கேட்டாச்சு
எத்தனை பாத்து எத்தனை கேட்டு என்னாச்சு
புத்தியும் கெட்டு சத்தியும் கெட்டு நின்னாச்சு
கிட்டப்பா அந்த காலத்துல காயாத கானகத்தே
பி யூ சின்னப்பா வந்த காலத்துல காதல் கனிரசமே
மன்மத லீலை எம்கே டி காலத்துலே
நடையா இது நடையா நம்ம நடிகர் திலகம் பாணியிலே
அலோ அலோ சுகமா அட ஆமா நீங்க நலமா
இங்கயும் தான் கேட்டோம்
அண்ணன் எம் ஜி ஆர் பாட்டுக்கல
இந்த காலத்து இளைஞர் செய்யும் காதலுக்கு
இளையராஜா எந்தன் பாட்டிருக்கு
வீட்டுல அதை பாடுங்க
பொண்டாட்டிய லவ் பண்ணுங்க
நம்ம தகப்பன் பேச்ச தாயின் பேச்ச மதிக்கனும்
நீயாக பெண் தேடக்கூடாது
எனக்கிந்த காதல் கசக்குதைய்யா ( வரவர)
காதல் மோதல் காதல் கசக்குதைய்யா கசக்குதைய்யா
திரைப்படம் : ஆண்பாவம்
பாடியவர் : இளையராஜா
இசை : இளையராஜா
காமெடியிலும் கார்டூனிலும் கலக்கும் நான் ஆதவன் அவர்களின் பிறந்தநாளுக்காக இப்பாடல் ஒலிக்கிறது . மக்களே வந்து வாழ்த்துங்க..
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 11:55 PM 12 பின்னூட்டங்கள் Links to this post
வகை இளையராஜா
நான் வானவில்லையே பார்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அது காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அது காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னல் பார்வை ஜன்னலில்
வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்
கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் இரு கண்கள் ஆகிவிடுமோ
தேடி தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ
மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ
பகல் நேரம் நிலவை பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சுது
கொஞ்சம் நில்லம்மா
(நான் வானவில்லையே..)
சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாவையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு உனை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி விட மார்பில் ஒதுங்கி விடுவேன்
பொய் மானை தேடி சென்றது நாமனின் கண்ணம்மா
மெய் மானை தேட சொன்னது மாரனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சுது
கொஞ்சம் நில்லம்மா
(நான் வானவில்லையே..)
படம்: மூவேந்தர்
இசை: சிற்பி
பாடியவர்: ஹரிஹரன்
பதிந்தவர் MyFriend @ 1:28 AM 1 பின்னூட்டங்கள் Links to this post