Thursday, November 10, 2011

சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்




சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
புள்ளி வைத்தாய்
யாரைக்கேட்டு என்வாசலிலே
கோலம்போட்டாய்
வீட்டுக்குள் விடச்சொல்லிக்
கேட்டுப்பார்த்தாய்
மறுத்ததும் இடி என்று திட்டித்தீர்த்தாய்
ஹூலாலா ஹூலாலா ஹூலா ஹூலா

வானத்தின் தீபாவளிகள் பார்த்தேன் பார்த்தேனே
ஈரத்தின் தேம்பாவனிகள் கேட்டேன் கேட்டேனே
கேட்டேனே
(சொட்டு சொட்டு சொட்டாய்)

மரங்களின் கதகளி
மரகத வயல்வெளி
பார்த்தேனின்று
பார்த்தேனின்று

அலைகளை தாயமாய்
உருட்டிடும்
கடலிடம்
கண்டேன் கண்டேன் கவிதை ஒன்று
பூவின் மீது
தாழ்ப்பாள் போட்டு
தூங்கும் தேனை திருடிட வா
வாயை வாயை மூடித்திறந்தே பேசும்
மீனே பதில் தரவா

தையாரே தையாரே
தைய்யா தையயா
தையாரே
மயில்தோகை மயில்தோகை
பட்டுச்சேலை முந்தானை
முந்தானை
(சொட்டு சொட்டு சொட்டாய்)

வானமே வாயிலே
பருகிடும் ஆசையிலே
தூக்கம் இன்றி
தூக்க்ம் இன்றி
வானவில் பாலமா
தரை வரை நீளுமா
ஏக்கம் கொண்டேன்
ஏக்கம் கொண்டேன்

விண்மீன் கிண்ணம்
பொங்கும் வண்ணம்

வானில் வழியும் வெண்ணிலவே
காலை நேரம் காற்றில் ஈரம்
சோம்பல் முறிக்கும் சூரியனே
ஓ தையாரே தையாரே
தைய்யா தைய்யா
தையாரே

தீராத தீராத இன்பமெல்லாம் கண்டேனே
இயற்கையிலே

(சொட்டுசொட்டாய்)

திரைப்படம் : வர்ணஜாலம்
இசை : வித்யாசாகர்
வரிகள் : தாமரை
பாடியவர் : மாதங்கி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam