Tuesday, November 1, 2011

மயிலே மயிலே உன் தோகை இங்கே


ஜென்ஸி பற்றிய ஒரு கட்டுரை



மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
கனி வாய் மலரே பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா...நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழலில் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

திரைப்படம் : கடவுள் அமைத்த மேடை
பாடியவர் : பாலசுப்ரமணியம் , ஜென்ஸி
இசை : இளையராஜா

2 Comments:

விச்சு said...

அருமையான பாடல்.

ப.கந்தசாமி said...

இப்போதுதான் வந்திருக்கிறேன். உங்கள் பதிவை அறிந்து கொள்ள சிறிது அவகாசம் தேவை.

Last 25 songs posted in Thenkinnam