தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய்
மொத்தத்தில் போரை மூட்ட்ப்போனாய்
(தித்திக்கும்..)
தொடத்தொடத்தொடத்தொட கைகள் கொதிக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே
படப்படப்படப்பட தேகம் கொதிக்குது
பலப்பலப்பலப்பல விண்மீன் பறக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே
(தித்திக்கும்..)
முதன் முதலாய் சறுக்க வைத்த
தனிமையிலே சிரிக்க வைத்தாய்
பக்கத்திலே வந்து நின்றாய்
பஞ்சனையில் பங்கு தந்தாய்
புது உலகம் காட்டிவிட்டாய்
பெண் வெட்கம் பொட்டுவிட்டாய்
உடல் கண்டிஷன் போட்டு விட்டாய்
பூ உடலின் தாழ்த்திறந்தாய்
இரண்டே இரண்டு இதழை கொண்ட
அதிசயப்பூ நீ தானே
தேனை தேடும் வண்டாய் வந்து
தீயில் மாட்டிக்கொண்டேனே
தூரத்தில் தூரத்தில் பூவெண்டு நீ தானே
பக்கத்தில் வந்தாளோ பூகம்பம் நீ தானே
முக்கனி மூன்றும் ஒன்றாய்க் காய்க்கும்
சர்க்கரை மரமும் நீ தானே
கூடை கொண்டு பறித்திட வந்தவன்
கூண்டுக்கிளியாய் ஆனேனே
பேரின்பம் எதுவென்றால்
பெண் என்றே சொல்வேனே
என் உடலை உறங்கவைத்தாய்
கண்ணெதிரே கரைய வைத்தாய்
தொடும்போதே தொலைய வைத்தாய்
தீ மழையில் நனைய வைத்தாய்
ஹோ காதல் என்பது கத்தியைப்போலே
குத்துக்குத்தி கொண்றிடுமே
கண்கள் இரண்டும் கேடையமாக
தடுக்கும்போதும் வென்றிடுமே
காயங்கள் இல்லாத காமம்தான் இங்கேது
தீக்குச்சி தேடாமல் தீபங்கள் தோன்றாது
ஆண்களின் நெஞ்சம் மிருகம் போலே
வேட்டையாட விரும்புமே
பெண்கள் தேகம் அருகினில் வந்தால்
வெட்டுப்பட்டு திரும்புமே
மோகங்கள் எப்போதும் மின்சாரம்போல் ஆகும்
கை வைக்கும் போதெல்லாம் நம் தேகம் தூளாகும்
இடைவெளிகள் தாண்டிவிட்டாய்
இடையினிலே தூண்டிவிட்டாய்
மகரந்த மழைக்கொடுத்தாய்
மறுஜென்மம் எடுக்க வைத்தாய்
(தித்திக்கும்..)
படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: கே கே, ஷ்வேதா
0 Comments:
Post a Comment