Thursday, May 28, 2009

TN 07 AL 4777 - கண்ணீரை போலே




கண்ணீரை போலே வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே பாடம் இல்லை
உன் நெஞ்சின் சோகம் எல்லாம் கேட்டுக்கொள்ளு
உனக்கு இங்கே உன்னை தவிற யாரும் இல்லை
பணம் ஒன்றே எப்போதும் வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில் துயரம் இல்லை
(கண்ணீரை..)

ஒரு அலைமீது போகும் இலை போலத்தானே
உலகில் மனிதன் வாழ்க்கை போகும்வரை போவோம் நாமே
அதில் அகங்காரம் என்ன அதிகாரம் என்ன
அன்பின் வழியில் சென்றால் கரை சென்று சேர்வோம் நாமே
கவலையின்றி உலகத்திலே மனிதன் யாரும் கிடையாது
கவலை தாங்கி போவதினால் தாமரைப் பூக்கள் உடையாது
காலம் ஓட காயம் என்ன மாயமாய் மறையும் பார்
(கண்ணீரை..)

தாய் கருவோடு வாழ்ந்த அந்நாளில் தானே
கவலை எதுவும் இன்றி கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே
பின் காசோடு கொஞ்சம் கனவோடு கொஞ்சம்
நம்மை நாமே இன்று தேடித்தான் தொலைகின்றோமே
வாழ்வில் நீயும் வலையாமல் மலையில் ஏற முடியாதே
வலிகள் ஏதும் இல்லாமல் வாழ்க்கை கண்ணில் தெரியாதே
காசும் பணமும் எப்போதும் கானல் நீராய் மறைந்திடுமே
(கண்ணீரை..)

படம்: TN 07 AL 4777
இசை: விஜய் அந்தோனி
பாடியவர்: பிரசன்னா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam