ஜல்ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சலவென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திடவேண்டும் இரவுக்குள்ளே...
காட்டினில் ஒருவன் எனைக்கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்று
கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்
(ஜல்ஜல் ஜல்)
அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல்முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
(ஜல் ஜல் ஜல்)
இன்றே அவனை கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்வதும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது
(ஜல் ஜல் ஜல்)
திரைப்படம் : பாசம்
பாடலைப்பாடியவர் : எஸ் . ஜானகி
2 Comments:
ஞாயிறு மதிய வேளைகளில்,அப்பாவின் டேப்ரிக்கார்டரில் ஓடத்துவங்கும் பாடல்களின் ஞாபகங்களை இந்த பாட்டில் மீட்டித்தந்தது :)
யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.
யாருடைய பின்னூட்டமும் தேவையில்லை.
படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்
“வாரம்” இணைய இதழ் (லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)
வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!
Post a Comment