Sunday, May 31, 2009

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி...

ஜல்ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சலவென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திடவேண்டும் இரவுக்குள்ளே...

காட்டினில் ஒருவன் எனைக்கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்று
கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்
(ஜல்ஜல் ஜல்)

அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல்முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
(ஜல் ஜல் ஜல்)

இன்றே அவனை கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்வதும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது
(ஜல் ஜல் ஜல்)




திரைப்படம் : பாசம்
பாடலைப்பாடியவர் : எஸ் . ஜானகி



அடி மஞ்ச கிழங்கே




அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
தன தந்தனனா தன தனனா தந்தனனனா தனா
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
தன தந்தனனா தன தனனா தந்தனனனா தனா

குமரிப்புள்ள குமரிப்புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
குமரிப்புள்ள குமரிப்புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
பருவப்புள்ள பருவப்புள்ள குளிக்கப் போறாங்க
அட ஆத்தங்கரப் பறவைகளே அங்கிட்டு போய்ருங்க

அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சிக் குளிக்கும் தங்கக் கிழங்கே
தேச்சிக்குளிக்கும் தங்கக் கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சிக் குளிக்கும் தங்கக் கிழங்கே
தேச்சிக்குளிக்கும் தங்கக் கிழங்கே

மஞ்ச புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க
மருதாணி பிடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க
ம்ம்.. நாளைக்கு
வெள்ள சுண்ணாம்பு வச்சிக்கிட்டு வெத்தலையை போட்டுக்கிட்டு
அடி நாக்கு சிவந்திருக்கா அவனைக் கேட்டுக்க
அவனா இல்ல இல்ல அவரைக் கேட்டுக்க

அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சிக் குளிக்கும் தங்கக் கிழங்கே
தேச்சிக்குளிக்கும் தங்கக் கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சிக் குளிக்கும் தங்கக் கிழங்கே
தேச்சிக்குளிக்கும் தங்கக் கிழங்கே

படம்: தாஜ் மஹால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஃபெபி மணி, கங்கா

Saturday, May 30, 2009

கந்தசாமி - ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி



ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு

போடி போடி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு லாங் ட்ரைவ் போலா கம் வித் மீ
ஸ்லோவா ஸ்பீடா நீயே ஓட்டிப்பாரு

போடி போடி

ஓட்ட சிம்கார்ட்டே எம்டி ஐப்போட்டே
உன்ன ஸ்வ்ட்ச் ஆன் செய்யுறது வேஸ்டு
ஹட்ச்சு புல் டாக்கே நச்சு கீழ்ப்பாக்கி
என்ன சுத்தமா போனா நான் சேஃப்

மண்ரோடே டேய் மண்ரோடே
எப்ப ஆவ மேயின் ரோடே..

போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போ போ போ

ஹே Excuse me
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
உன் பேச்சும் தோட்டும் ரொம்ம குப்பலெட்சுமி
போடி போடி

ஹேய் கந்தசாமி என் லைஃபுல புயலா வந்த சாமி
என் அழகைப் பார்த்து மனசுல நொந்தசாமி
சீ வெந்தசாமி தூ ஹ ஹ ஹ..

உன் அழகுனால இல்ல
உன் இம்சையால நொந்தசாமி
உன் கையில சிக்கமாட்டா இந்த சாமி
கடவுள் இல்லைன்னு சொன்னான் இராமசாமி
காதல் இல்லைன்னு சொல்றான் கந்தசாமி

நோப்பா நோப்பா நோப்பா
சொன்னார் வள்ளுவர் கிரேட்ப்பா
கடல் தாண்டிக் கூடச்சொன்னார் கடைசி குரளில்
வேணாம் வேணாம் வேணாம்
நீ நாமம் போட வேணாம்
உன் கூட வந்தா சண்டைப்போட்டே வாழ்க்கைப்போகும் வீணா

ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே
காதல் ஒன்னும் யூதர் இல்லக் கொல்லாதே
லிங்கன் பேரனே லிங்கன் பேரனே
தத்துவங்கள் பேசிப்பேசிக் கொல்லாதே
காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான்
தீராது டிஷ்யூம் தான்

போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போ போ போ

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு
போடி போடி
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
போடா போடா

ஹேய் என்ன ரொம்ப ஓவரா பண்ற
ஒன்னும் பண்ண விட மாட்றியே
நீ படிச்சப் பொண்ணுதானே
உன்ன படிக்க முடியலையே
ஹே ஏ ஏ தள்ளிப்போ
என்னை தள்ளிட்டு போ
கொஞ்சம் கூடு
ரொம்ப மூடு
ஐயோ

வேணா வேணா வேணா வேஸ்டுப்பேச்சு வேணாம்
இப்ப விட்டாத்தப்பு நீ பின்னால் அழுவ தானா
ஹேய் போடி போடி போடி ஃபூலா போன லேடி
கெர்ள்ஸை நம்பி லூசாப்போன பாய்ஸ் பல கோடி
ஹே உப்பு மூட்டையே உப்பு மூட்டையே
லைஃப்புல்லா உன்னை தூக்கி சுமப்பேண்டா
ஓ டக்கு முட்டையே டக்கு முட்டையே
வாத்துக்கூட்டம் கூட உன்ன சேத்துக்காது
பேசாதே நீ கிராஃமாறி
ப்ளீஸ் வாயேன் டேக்மாறி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு
போடி போடி
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
போடா போடா

படம்: கந்தசாமி
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: விக்ரம், சுசித்ரா

Friday, May 29, 2009

ஓடுகின்ற தண்ணியிலே



1.மலரே மலரே தெரியாதோ,தேன்மழை,பி.சுசீலா
2.மோஹனப்புன்னகை,வனங்காமுடி,பி.சுசீலா,
3.கொஞ்சிப் கொஞ்சிப்பேசி,கைதி கண்ணாயிரம்,பி.சுசீலா,
4.நீரோடும் வைகையிலே,பார் மகளே பார்,டி.எம்.எஸ்,பி.சுசீலா
5.ஓடுகின்ற தண்ணியிலே உரசி விட்டேன்,அச்சமில்லை அச்சமில்லை,ம.வாசுதேவன்,பி.சுசீலா,
6.இன்னும் பார்த்துக் கொண்டு,வல்லவன் ஒருவன்,டி.எம்.எஸ்,பி.சுசீலா,
7.பொன் ஒன்று கண்டேன்,படித்தால் மட்டும் போதுமா,டி.எம்.எஸ்,பி.பி.ஸ்ரினிவாஸ், 8.அழகுக்கும் ஜாதியில்லை,நெஞ்சம் மறப்பதில்லை,பி.பி.ஸ்ரினிவாஸ்,பி.சுசீலா, 9.காணவந்த காட்சி என்ன,பாக்யலக்‌ஷ்மி,பி.சிசுசீலா,
10.உள்ளம் என்பது ஆமை,பார்த்தால் பசி தீரும்,டி.எம்.எஸ்

ரொம்ப நாள் கழித்து வந்துருக்கேன்.. மேலே உள்ள 10 பல்லவிகளையே ஆச்சரியத்துடன் பார்க்கிறீர்களா மேலே உள்ள யாவும் இந்த ஒலித்தொககுப்பில் உள்ளது எல்லாமே உங்களூக்கு உங்களுக்கே தான் உடனே ஒலிக்கோபை இயக்கவும். மனதை மயக்கும் தெவிட்டாத தேன் கிண்ணத்தில் ஒரு தேன் கிண்ணம்.. ஹ.. ஹ.. இது எப்படி இருக்கு?

Get this widget | Track details | eSnips Social DNA


இந்த ஒலித்தொகுப்பு சமீபத்தில் திருத்தியமைத்தது பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்

அங்காடித் தெரு - அவள் அப்படி ஒன்றும் அழகில்லை


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

படம்: அங்காடித் தெரு
இசை: GV பிரகாஷ்/ விஜய் அந்தோணி
பாடியவர்: பிரசன்னா

சிவா மனசுல சக்தி - தித்திக்கும் தீயை




தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய்
மொத்தத்தில் போரை மூட்ட்ப்போனாய்
(தித்திக்கும்..)
தொடத்தொடத்தொடத்தொட கைகள் கொதிக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே
படப்படப்படப்பட தேகம் கொதிக்குது
பலப்பலப்பலப்பல விண்மீன் பறக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே
(தித்திக்கும்..)

முதன் முதலாய் சறுக்க வைத்த
தனிமையிலே சிரிக்க வைத்தாய்
பக்கத்திலே வந்து நின்றாய்
பஞ்சனையில் பங்கு தந்தாய்
புது உலகம் காட்டிவிட்டாய்
பெண் வெட்கம் பொட்டுவிட்டாய்
உடல் கண்டிஷன் போட்டு விட்டாய்
பூ உடலின் தாழ்த்திறந்தாய்

இரண்டே இரண்டு இதழை கொண்ட
அதிசயப்பூ நீ தானே
தேனை தேடும் வண்டாய் வந்து
தீயில் மாட்டிக்கொண்டேனே
தூரத்தில் தூரத்தில் பூவெண்டு நீ தானே
பக்கத்தில் வந்தாளோ பூகம்பம் நீ தானே
முக்கனி மூன்றும் ஒன்றாய்க் காய்க்கும்
சர்க்கரை மரமும் நீ தானே
கூடை கொண்டு பறித்திட வந்தவன்
கூண்டுக்கிளியாய் ஆனேனே
பேரின்பம் எதுவென்றால்
பெண் என்றே சொல்வேனே
என் உடலை உறங்கவைத்தாய்
கண்ணெதிரே கரைய வைத்தாய்
தொடும்போதே தொலைய வைத்தாய்
தீ மழையில் நனைய வைத்தாய்

ஹோ காதல் என்பது கத்தியைப்போலே
குத்துக்குத்தி கொண்றிடுமே
கண்கள் இரண்டும் கேடையமாக
தடுக்கும்போதும் வென்றிடுமே
காயங்கள் இல்லாத காமம்தான் இங்கேது
தீக்குச்சி தேடாமல் தீபங்கள் தோன்றாது
ஆண்களின் நெஞ்சம் மிருகம் போலே
வேட்டையாட விரும்புமே
பெண்கள் தேகம் அருகினில் வந்தால்
வெட்டுப்பட்டு திரும்புமே
மோகங்கள் எப்போதும் மின்சாரம்போல் ஆகும்
கை வைக்கும் போதெல்லாம் நம் தேகம் தூளாகும்
இடைவெளிகள் தாண்டிவிட்டாய்
இடையினிலே தூண்டிவிட்டாய்
மகரந்த மழைக்கொடுத்தாய்
மறுஜென்மம் எடுக்க வைத்தாய்
(தித்திக்கும்..)

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: கே கே, ஷ்வேதா

Thursday, May 28, 2009

TN 07 AL 4777 - கண்ணீரை போலே




கண்ணீரை போலே வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே பாடம் இல்லை
உன் நெஞ்சின் சோகம் எல்லாம் கேட்டுக்கொள்ளு
உனக்கு இங்கே உன்னை தவிற யாரும் இல்லை
பணம் ஒன்றே எப்போதும் வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில் துயரம் இல்லை
(கண்ணீரை..)

ஒரு அலைமீது போகும் இலை போலத்தானே
உலகில் மனிதன் வாழ்க்கை போகும்வரை போவோம் நாமே
அதில் அகங்காரம் என்ன அதிகாரம் என்ன
அன்பின் வழியில் சென்றால் கரை சென்று சேர்வோம் நாமே
கவலையின்றி உலகத்திலே மனிதன் யாரும் கிடையாது
கவலை தாங்கி போவதினால் தாமரைப் பூக்கள் உடையாது
காலம் ஓட காயம் என்ன மாயமாய் மறையும் பார்
(கண்ணீரை..)

தாய் கருவோடு வாழ்ந்த அந்நாளில் தானே
கவலை எதுவும் இன்றி கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே
பின் காசோடு கொஞ்சம் கனவோடு கொஞ்சம்
நம்மை நாமே இன்று தேடித்தான் தொலைகின்றோமே
வாழ்வில் நீயும் வலையாமல் மலையில் ஏற முடியாதே
வலிகள் ஏதும் இல்லாமல் வாழ்க்கை கண்ணில் தெரியாதே
காசும் பணமும் எப்போதும் கானல் நீராய் மறைந்திடுமே
(கண்ணீரை..)

படம்: TN 07 AL 4777
இசை: விஜய் அந்தோனி
பாடியவர்: பிரசன்னா

Wednesday, May 27, 2009

வசீகரா என் நெஞ்சினிக்க



வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேண்க்குகிறேன் உன் நினைவால் நானே நான்
(வசீகரா..)

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
(வசீகரா..)

தினமும் நீ குளித்தாலும் எனை தேடி என் சேலை நுனியால்
உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று பின்னாலிருந்து
என்னை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே
(வசீகரா..)

படம்: மின்னலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: தாமரை

Tuesday, May 26, 2009

ஒன்றா ரெண்டா ஆசைகள்



ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் நான் கண்ட
நாள் இதுதான் கலாபக் காதலா
பார்வைகளால் பல கதைகள்
பேசிடலாம் கலாபக் காதலா
(ஒன்றா ரெண்டா..)

பெண்களை நிமிர்ந்து பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேராய்ப் பார்த்துதான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
ம்கப்பிடித்த பாடலொன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்
மழைவாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் நங்கும்
உன் கண்களில் எனது கனவினைக் காணப்போகிறேன்
(ஒன்றா ரெண்டா..)

சந்தியாக் கால மேகங்கள்
பொன் வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே
உன் நடையின் சாயலே தோணுதே
நதிகளிலே நீராடும் சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளிவழியே நீ வருவாய் என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்
நான் உன் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே சாகத்தோன்றுதே
(ஒன்றா ரெண்டா..)

படம்: காக்க காக்க
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: தாமரை

Monday, May 25, 2009

பார்க்காத என்னை பார்க்காத





பார்க்காத என்னை பார்க்காத
குத்தும் பார்வையால என்னை பார்க்காத
போகாத தள்ளி போகாத
என்னை விட்டு விட்டு தள்ளிப்போகாத
கொடுத்தத திருப்பி நீ கேக்க
காதல் கடனுமில்ல
கூட்டத்தில் நின்னு பார்த்துக் கொள்ள
நடப்பது கூத்துமில்ல
(பார்க்காத,,)

வேணா வேணான்னு நான் இருந்தேன்
நீதாலே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் தொரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுப்புட்ட
கருப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப்புட்ட
என்னுடன் நடந்த என் நிழல் தனியா நடக்கவிட்ட
உள்ள இருந்த என் உசுர வெளியே மிதக்க விட்ட
(பார்க்காத..)

வேணா வேணான்னு நினைக்கலையே
நானுமுன்னை நொறுக்கலையே
காணோம் காணோன்னு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்தை
நெஞ்சோடு சேத்து வெச்சேன்
தனியா இருந்த வலியை மட்டும்
தனியா அனுபவிச்சேன்
(பார்க்காத..)

பறவையின் சிறகுகள் விரிஞ்சாதான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்
கொடுத்தத திருப்பி நீ கேக்க
கடனா கொடுக்கலையே
உனக்கது புரியலையே

படம்: ஆறு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: திப்பு, சுமங்கலி

Sunday, May 24, 2009

அயன் - நெஞ்சே நெஞ்சே



நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில், ஏன் சேர்கிறாய்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னை காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும் பொய்யாக‌ க‌ண்டேனே

அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே

வெயில் கால‌ம் வ‌ந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை கொண்டால் தான் காத‌ல் ருசியாகும்

உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

க‌ள்வா ஏய் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே

காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாதே
காற்று நம் பூமி ந‌மை விட்டு போகாதே

ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே

ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்

உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே ஏன் வ‌ருகிறாய்

படம் : அயன் (2009)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, மாலதி
வரிகள் : வைரமுத்து

ராமன் தேடிய சீதை - நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா




நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா
(நண்பா..)

உனை நீ தாழ்வாய் பார்க்காதே
அட நீயே உன்னிடம் தோற்க்காதே
எதுவும் முடியும் என்று நினை
நீ எழுந்து நடக்கும் ஏவுகணை
(நண்பா..)

நண்பா நண்பா உன் நெஞ்சில் ஏதடா
வானம் நோக்கி நீ வளரும் விழுதடா
தயக்கம் என்பது சொந்த சிறை
அதில் தாங்கி கிடைப்பது உதன் குறை
அதிர்ஷ்டம் விற்பது கடவுல் கடை
உன் முயற்சி ஒன்றே அதற்கும் விலை
(நண்பா..)

படம்: ராமன் தேடிய சீதை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: கார்த்திக்

Saturday, May 23, 2009

குசேலன் - சினிமா சினிமா சினிமா சினிமா





சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

எம்.ஜி.ஆரு சிவாஜி சாரு என்.டி.ஆரு ராஜ்குமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இது போல் வருமா வருமா
வருமா...

கடவுள் யாரென்று யார் கேட்பா
அட கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்
கர்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா
அத கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்
எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்
என்று எடுத்து காட்டுவது சினிமாதான்
அதுக்கு யார் இங்க சாட்சின்னா
அட வேற யாரு நம்ம தலைவருதான்
மொத்த பூமியையும் பத்து ரூபா தந்தா
சுத்தி காட்டுது இந்த சினிமாதான்

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

பாரு பாரு படம் ஷூட்டிங் பாரு பலர் வேர்வை சிந்துறாங்க
நூறு கைகள் ஒன்று சேர்ந்து ஒரு சினிமா உருவாக
காப்பி டீயும் தரும் புரோடக்‌ஷன் பாயும் ரொம்ப முக்கியம்தான்
ஷோலிடல்ல பவர் ரைக்டு போட வேணும் உழைக்கும் வர்க்கம்தான்
மேலும் கீழும் என்ன பேதம் பார்க்க இங்கு ஏற்றம் தாழ்வு இல்லை
கோடம்பாக்கம் இங்கு கோவில் ஆச்சு இந்த சினிமா தொழிலாலே
ஏ க்ரூப் டான்ஸு இந்த கோரஸ் பார்ட்டி எல்லா குடும்பம் ஆகும் தப்பா
வந்த பேரும் இங்க வாழ வைக்கும் இந்த சினிமா சினிமாதான் ஹேய்

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

எம்.ஜி.ஆரு சிவாஜி சாரு என்.டி.ஆரு ராஜ்குமாரு
இவங்க இருந்த சினிமா சினிமா
இது போல் இது போல் வருமா வருமா
வருமா...

சூப்பர் ஸ்டார்! அதோ பார்..
ராஜயோகம் பண்ண சூப்பர்ஸ்டார் நம்ம ஊருக்கு வந்தாரு
சிங்கம்னா சிங்கம்தான்
மூக்கு மேலே விரல் வைக்கும் வண்ணம் பல வேஷம் போட்டாரு
அவர் உருவம் பாரு எளிமை
அந்த எளிமைதானே அவருக்கு வலிமை
தலை கனத்திடாத தலைவன் எங்கள் அண்ணன் மட்டும்தான்
ஜப்பான் போனால் சூப்பர் ஸ்டாரு டென்மார்க் போனால் சூப்பர் ஸ்டாரு
அமேரிக்காவில் சூப்பர் ஸ்டாரு ஆப்பிரிக்காவில் சூப்பர் ஸ்டாரு
பார்த்த இவனின் பனியன் நீ கவனி பள்ளி பிள்ளை படிப்பில்ல கவனி
சைகரி இருக்கும் பைகளும் பூக்கும் குடையில் கூட சூப்பர் ஸ்டார்
கடவுள் யாரென்று யார் பார்த்தா
அட கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்

சூப்பர் ஸ்டார் பேரைப்பார்
திரை மீது மக்கள் பார்க்கும் போது விசில் வானை பிளக்காதோ
ரசிகர்கள் கூட்டம்தான்
பாலும் தேனும் சேர்ந்து பந்தில் நீடு ஒன்று வாழ்த்த பாடாதோ
அந்த படையப்பாவின் படைதான் இந்த பூமி எங்கும் அணிவகுத்திருக்க
என்றும் மக்கள் மனதை அள்ளும் எங்கள் ஒரே மன்னந்தான்
சூப்பர் ஸ்டாரும் சூரியனும்தான்
உலகம் சுற்றி ஒளியும் ஒன்று
இந்த பெருமை யார்க்கும் இல்லை
இங்க எந்த மனிதனுக்கே ஒன்று தமிழா

கடவுள் யாரென்று யார் கேட்பா
அட கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்
கண்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா
அத கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்
எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்
என்று எடுத்து காட்டுவது சினிமாதான்
அதுக்கு யார் இங்க சாட்சின்னா
அட வேற யாரு நம்ம தலைவருதான்
மொத்த பூமியையும் பத்து ரூபா தந்தா
சுத்தி காட்டுது இந்த சினிமாதான்

சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா
சினிமா சினிமா சினிமா சினிமா

படம்: குசேலன்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

Tuesday, May 19, 2009

அபியும் நானும் - சின்னம்மா கல்யாணம்




சின்னம்மா கல்யாணம் சீதனம்மாய் என்னத் தர
சின்னம்மா கல்யாணம் சீதனம்மாய் என்னத் தர

பொன் இருந்தால் பொருள் இல்ல
பொட்டியில பணம் இல்ல
உசுரவிட என் கிட்ட
ஒசந்த பொருள் ஏதுமில்ல

மலிவான பொருளுன்னு
மறுக்காத நீ தாயி
என் உசுர நான் தாரேன்
ஏத்துக்கோ என் தாயி..

படம்: அபியும் நானும்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: கைலாஷ் கேர்

Monday, May 18, 2009

TN 07 AL 4777 - சொர்க்கம் மதுவிலே




சொர்க்கம் மதுவிலே சொக்கும் இரவிலே
வாம்மா அருகிலே நீ காட்டு தீப்போலே
மனதை கட்டிப்போடாதே
இரவில் தனியாய் தூங்காதே
வயசுப்போனால் திரும்பாதே
(சொர்க்கம் மதுவிலே..)

லைஃபுக்கு தேவை போதை
இது தானே மாடர்ன் கீதை
இளமை பாதை அதிலே நான் மேதை
கனவுக்கு ஏன் கட்டுப்பாடு
கவலைகள் தூக்கிப்போடு ஆடிப்பாடி
நடு ரோடே வீடு
அடடடடா லக லக லக
பேச்செனப் பேச்சு லக லக லக
அனு அனுவாய் சூடானது மூச்சு
மெது மெதுவாய் ஏறுது ஆசை
உயிர் நடுவில் உடைகின்ற ஓசை
(சொர்க்கம் மதுவிலே..)

எங்கெங்கோ கண்கள் பாயும்
அங்கங்கே கைகள் மேயும்
மேகம் தேயும் புது மாயம் மாயம்
சண்டேஷன் ஏற்றம் தோற்றம்
இது மாடர்ன் பூக்கள் கூட்டம்
ஜாடை காட்டும் மனம் வாலை ஆட்டும்
நரம்புகளோ போடுது கூச்சல்
இமை இடுக்கில் மன்மத காய்ச்சல்
இரவிலே ஹே ஏ ஹேய் வாலிப கூச்சல்
இதயத்திலே ரகசிய நீச்சல்
(சொர்க்கம் மதுவிலே..)

படம்: TN 07 AL 4777
இசை: விஜய் அந்தோனி
பாடியவர்கள்: சக்திஸ்ரீ, ராஹுல் நம்பியார்

Sunday, May 17, 2009

சிவா மனசுல சக்தி - எப்படியோ மாட்டிக்கிட்டேன்





எப்படியோ மாட்டிக்கிட்டேன்
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
தப்பி செல்லவே நெனச்சேனே
பாவை மனசுக்கு தெரியலையே
விட்டுச்செல்லவே துடிச்சேனே
வழி இருந்தும் முடியலையே
எதுக்காக டென்ஷன் ஆகுற
எனக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
(எப்படியோ..)

எங்கிட்ட பொய்பேசுனியே அது டூ மச்சு
என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே அது த்ரீ மச்சு
எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த அது ஃபோர் மச்சு
சைக்கிள் கேப்புள சீன் போட்டியே அது ஃபைவ் மச்சு
எதுக்காக டென்ஷன் ஆகுற
எனக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
(எப்படியோ..)

கோவையில ஏன் பொறந்த அது ரொம்ப ஓவர்
குசும்போடத்தான் ஏன் வளர்ந்த ரொம்ப ரொம்ப ஓவர்
கண்கள் இனிக்க லையிறியே ஓவர் ஓவரோ ஓவர்
சண்டைக் கோழியா திரியீயே ஓவர் ஓவரோ ஓவர்
எதுக்காக டென்ஷன் ஆகுற
எனக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
(எப்படியோ..)

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: க்ளிண்டன், ந்ருத்தியா

Saturday, May 16, 2009

சிவா மனசுல சக்தி - ஒரு அடங்காப்பிடாரி





ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே ஆசை வச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே மீசை வச்சேன்
(ஒரு அடங்காப்பிடாரி..)
இவ நச்சரிப்பு தாங்கவில்ல ஐயோ சாமி
இந்த கண்கலால கொதிக்க்குது இந்த பூமி
பெரும் புயலும் அடங்கும் பேயும் அடங்கும்
பெரும் புயலும் அடங்கும் பேயும் அடங்கும்
இந்த பெண்களை அடக்க முடியல சாமி
(ஒரு அடங்காப்பிடாரி..)

அடிக்கடி கோபங்கள் வருவதினாலே
வானவில்லில் அவளுக்கு பிடித்தது சிவப்பு
ஓ அடிக்கடி கண்டனங்கள் செய்வதினாலே
கொடிகளில் அவளுக்கு பிடித்தது கறுப்பு
அவள் மனதின் ஆழம் கடலை போல
அதனால் பிடித்தது நீலம்
அதன் உள்ளே இறங்கி ஆண்கள் சென்றால்
கிடைப்பது முத்து இல்லை சோகம்
இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்குத்தெரியல
நீ காதல் தேர்வில் பாஸ் மார்க் வாங்க வழியில்லை
(ஒரு அடங்கப்பிடாரி..)

அடிக்கடி ஆணவம் கொல்வதினாலே
நான்வெஜ்ஜில் அவளுக்கு பிடித்தது கொழுப்பு
அடிக்கடி ஆண்களை முறைப்பதினாலே
அச்சச்சோ வளருது அவளது செறுப்பு
அவள் வீதியில் இறங்கி நடந்துப் போனால்
விபத்து பதிகள் ஆகும்
அவள் டீக்கடை சென்று பாய்லரை தொட்டால்
வெறும் நீர் வெண்ணீர் ஆகும்
ஹேய் இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க உனக்கு தெரியலையா
நீ காதல் தேர்வில் பாஸ் மார்க் வாங்க வழியில்லையா
ஹேய் அடங்காப்பிடாரி..
(ஒரு அடங்காப்பிடாரி..)

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், ஷ்வேதா

Friday, May 15, 2009

TN 07 AL 4777 - ஐ போனின் ஸ்க்ரீனா




ஐ போனின் ஸ்க்ரீனா நீ அடடா தொட்டால் நழுவுகின்றாய்
ஹார்ட் என்னும் இன்பாக்ஸில் அழகாய் வந்து நிரம்புகிறாய்
ஏனோ நீ எப்போதும் எங்கே துணை மிரட்டுகிறாய்
அவுட் கோயிங் பேசாமல் சைலண்டாய் மிரட்டுகின்றாய்

டச்சிங் டச்சிங் அமி டப்பிங் டப்பிங்
டச்சிங் டச்சிங் அமி டப்பிங் டப்பிங்
டச்சிங் டச்சிங் அமி டப்பிங் டப்பிங்

ஐ போனின் ஸ்க்ரீனா நீ அடடா தொட்டால் நழுவுகின்றாய்
ஹார்ட் என்னும் இன்பாக்ஸில் அழகாய் வந்து நிரம்புகிறாய்

யாரோ நீ நெஞ்சில் பறவிட்டாய் என் கண்ணில் தீயை ந்றிய விட்டாய்
ஜன்னல் திறந்தாய் மின்னல் விழுந்தாய் மின்னல் மறைந்தாய்
ஏனோ நீ என்னை திருடிவிட்டாய் தூக்கத்திலும் என்னை அலயவிட்டாய்
உந்தன் அழகால் எந்தன் வயதை பிடுங்கிவிட்டாய்
தீக்குச்சி எதுவுமின்றி தோன்றிடும் தீயுமின்றி
தீப்பற்ற வைக்குதடா தீண்டும் உந்தன் குரலே
மெல்ல வரும் மழையுமின்றி மஞ்சல் நிற வெயிலுமின்றி
வானவில் தெரியுதே உன் அழகிலே
(ஐ போனின்..)

என் தூக்கம் உன்னை திட்டிவிட்டதே
மழை மேகம் உன்னை தேடுகின்றதே
உந்தன் நினைவில் எந்தன் தனிமை வாழுகின்றதே
கால் கடுக்க காத்துக்கிடக்கையிலே
கடிகார நேரம் கடக்கையிலே
காதல் கொடுக்கும் வலி என்னையே கொல்லுகிறதே
சந்திரனால் அணல் அடிக்க சூரியன் போல் ஏறெடுக்க
சூழ்நிலை மாறுதடா உந்தன் நீலவிழியால்
மங்கி மங்கி நீ அடிக்க தந்திரம்தான் நான் படிக்க
மோகங்கள் கூடுதடி முன்னழகில்
(ஐ போனின்..)

படம்: TN 07 AL 4777
இசை: விஜய் அந்தோனி
பாடியவர்கள்: சங்கீதா ராஜேஸ்வரன், ரஞ்சித்

Thursday, May 14, 2009

சிவா மனசுல சக்தி - ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்




ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றிவிட்டாய்
சிறகைப் போலொரு வேகத்தில்
வேகத்தில் வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
நிலவைப்போல் உனை தூரத்தில்
நிலவைப்போல் உனை தூரத்தில்
பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்
நீ எனது உயிராக
நான் உனது உயிராக
ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்
நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்

உயிரே நீ பார்த்தாலே
உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால் அடி உன்னாலே
உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ரஞ்சித்

Wednesday, May 13, 2009

யாவரும் நலம் - காற்றிலே வாசமே



காற்றிலே வாசமே காதலின் சுவாசமே
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா
கொஞ்சநாளாய் நானும் நீயும் கொஞ்சிக் கொள்ளும்
அந்தக் காதல் நேரங்கள் தேயுதே

ஓ என்னதான் நீ செய்ய போகிறாய்
நீ பேசிப்பேசி காலம் தேய்கிறாய்
நான் காத்து காத்து ஏக்கம் கொண்டப்பின்னால்
கண்ணீரில் சேர்க்கிறாய்

தீயிலே தேனிலே
தேயுதே தேகமே
ஒரு விழி தீயின்றி ஏங்கிடும் நிலாவே
ஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம்
வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே
நீ தாமரைப்பூ பூக்கும் நீர்நிலை
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் வானிலை
நீ மாற்றிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்வினை

அன்பே அன்று உன்னைக் கண்டேன்
கண்டபோதிலே நெஞ்சில் அள்ளி வைத்துக்கொண்டேன்
இதயம் உருகியதே
முன்பே நானும் நீயும் ஒன்றாய் சேர்ந்து வாழ்வோம்
சென்ற நூறு ஜென்மம் ஜென்மம்
அதனை அறிந்ததனால் தான்
இரவிலே தீயின்றீ எறிந்திடும் நிலாவே
ஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம்
வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே

ஓ என்னதான் நீ செய்ய போகிறாய்
நீ பேசிப்பேசி காலம் தேய்கிறாய்
நான் காத்து காத்து ஏக்கம் கொண்டப்பின்னால்
கண்ணீரில் சேர்க்கிறாய்
நீ தாமரைப்பூ பூக்கும் நீர்நிலை
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் வானிலை
நீ மாற்றிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்வினை

படம்: யாவரும் நலம்
இசை: ஷங்கர் எசான் லோய்
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், சித்ரா

Tuesday, May 12, 2009

சர்வம் - சிறகுகள் வந்தது




சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்த்தது உள்ளே செல்ல
சுகங்களும் கூடுது உன்னை தேடியே

உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலாம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்ன ஆகுமோ
உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாஹை
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ
(கனவுகள் பொங்குது..)

நதியே நீ எங்கே என்று
கரைகள் தேடக் கூடாதா
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேடக் கூடாதா ஓ..
மழை இரவினில் குயிலின் கீதம்
துடைப்பதை யார் அறிவார்
கடல் நொடியின் கிடக்கும்
பலரின் கனவுகள் யார் அறிவார்
அழகே நீ எங்கே இருக்கிறாய்
வழித்தால் அன்பே நீ எங்கே இருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்
அன்பே எந்தன் நெஞ்சம்
எங்கே பூவின் உள்ளே நிலவின் மேலே
தீயின் கீழே கரைக்கு வெளியே இல்லையே
உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன் உயிரில்
உள்ளே வழியே..

எனக்கே நான் சுமையாய் மாறி
என்னை சுமந்து வந்தேனே
விழி நினைக்கிற நேரம் பார்த்து
இம்மை விலகி விடாது
உயிர் துடிக்கும் முன்னே
எந்தன் உயிர் ஒதுக்கி விடாது
உலகம் ஒரு புள்ளி யாதுவே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஒரு பூ வெடிக்குதே
சுகமோ வழியோ எல்லை மீறுதே
(சிறகுகள்..)

படம்: சர்வம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஜாவேட் அலி, மதுஸ்ரீ

Monday, May 11, 2009

அயன் - விழி மூடி யோசித்தால்





விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே
(விழி மூடி..)

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உன்ந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே..
விண்ணோடும் முகிலோடும் விழையாடி திரிந்திடுமே.
(விழி மூடி..)

ஆசை என்னும் தூண்டில் முல்ல்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது-மயக்கம்..
இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்
(விழி மூடி யோசித்தால்..)

படம்: அயன்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: கார்த்திக்

Sunday, May 10, 2009

பசங்க - அன்பாலே அழகாகும் வீடு




அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்க்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும்போது
வேறொன்றும் அதற்க்கில்லை ஈடு
(அன்பாலே..)

வாடகை வீடே என்று வாடினால் ஏது இன்பம்
பூமியே நமக்கானது ஓ..
சோகமே வாழ்க்கை என்று சோர்வதால் ஏது லாபம்
யாவுமே இயல்பானது
மாறாமல் வாழ்வுமில்லை தேடாமல் ஏதுமில்லை
நம்பிக்கை விதையாகுமே
கலைகின்ற மேகம் போலே காயங்கள் ஆறிப்போக
மலரட்டும் எதிர்காலமே
(அன்பாலே..)

பாசமே கோவில் என்று வீட்டிலே தீபம் வைத்தால்
கார்த்திகை தினந்தோறுமே
ஆ.. நேசமே மாலை என்று நெஞ்சிலே சூடிக்கொண்டால்
வாசனை துணையாகுமே ஆ...
கூடினால் கோடி நன்மை சேருமே கையில் வந்து
வாழ்ந்திடு பிரியாமலே
ஏணியே தேவையில்லை ஏறலாம் மேலே மேலே
தோல்விகள் வெறும் காணலே
(அன்பாலே..)

படம்: பசங்க
இசை: ஜேம்ஸ் வசந்த்
பாடியவர்கள்: பாலமுரளி கிருஷ்ணா, சிவாங்கி

Saturday, May 9, 2009

சிவா மனசுல சக்தி - எம் ஜி ஆரு இல்லீங்கோ





எம் ஜி ஆரு இல்லீங்கோ நம்பியாரு இல்லீங்கோ
நாங்கெல்லாம் நடுவுலங்க
ஃபுல்லடிக்க மாட்டோங்க பீரடிக்க மாட்டோங்க
நாங்கலெல்லாம் வாட்டர் தானுங்க
ஹைக்க்ளாஸ் ஃபிகருக்கு ரூட்டு போடமாட்டோம்
லோக்க்ளாஸ் ஃபிகருக்கு கட்ரு போடமாட்டோம்
கான்வென் ஃபிகருக்கு அங்கிள் ஆகமாட்டோம்
காலேஜ் ஃபிகருக்கு அண்ணன் ஆகமாட்டோங்க
டாடி சொல்ல மாட்டோமே மம்மி சொல்ல மாட்டோமே
ஏ.டி.எம் மெஷின் என்று தான் சொல்லுவோமே
தாடி வைக்க மாட்டோமே ஷேவும் பண்ண மாட்டோமே
நாலு நாளு தாடியோட அலைவோமே
(எம் ஜி ஆரு..)

ராத்திரியெல்லாம் தூங்கமாட்டோம் ரவுண்டடிப்போம்
சாத்துற நாயர் கடை டீக்குடிப்போம்
(ராத்திரியெல்லாம்..)
விடியும் வரை அதிரடியாய் படப்படக்கும் எங்களோட தாளம்
இரவினிலே இடிமழையாய் தடதடக்கும் எங்கள் பைக்கின் வேகம்
வீட்டில் ஓடும் பொண்ணுங்க தரிசனம் பார்க்கத்தான்
ஓவின் வாசலில் தவம் கெடப்போம்
பிக்கப்புன்னா பார்த்திதான் பேக்கப்புன்னா ஓடி தான்
கெட்டப்புள்ள மாட்டிக்கிட்டு ஆய் சொல்லுவோம்
(எம் ஜி ஆரு..)

பீச்சுக்கு போயி லைக்ட் ஹவுஸுக்கே லைட் அடிப்போம்
போலிஸு வந்தா ஸ்டுடன்ஸுன்னு பொய் சொல்லுவோம்
திரையரங்கில் படையெடுப்போம்
விரல்சழியே விசில் சத்தம் பறக்கும்
குட்டி சுவரில் கொடு கிழித்து
கிரிக்கட்டுல எங்க டீமு ஜெயிப்போம்
சிட்டி செண்டர் போயிதான்
ஷெர்ட்டு பேண்டு பார்த்துதான்
விலை மட்டும் கேட்டுட்டு வெளிவருவோம்
(எம் ஜி ஆரு..)

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரி சரண்

Friday, May 8, 2009

பசங்க - ஒரு வெட்கம் வருதே வருதே




ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைபாயுதே
இது என்ன முதலா முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னைக் களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பர பரபரவெனவே துடித்துடித்திடும் மனமே
வர வர வரக்கரைத் தாண்டிடுமே

மேலும் சில முறை
உன் குறும்பிலே நானே தோற்கிறேவேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்குள்ளும் பெண்மை இருக்கிறதே
தூங்க வைத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
ஒரு வரி சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் கேட்க்கும் நாள் வரும்
(மழை இன்று..)

ஆ.. காற்றில் கலந்து நீ
என் முகத்திலே ஏனோ மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே
வழிகளில் ஊர்கோலம் இதுவரை நாம் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே
(ஒரு வெட்கம்..)

படம்: பசங்க
இசை: ஜேம்ஸ் வசந்த்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்

Thursday, May 7, 2009

பொறுமை என்னும் நகை அணிந்து



வென்கலக்குரலோன் என்று எப்படி அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை சொல்வோமோ அதே போல் வென்கலக்குரலி கே.பி.சுந்தராம்பாள் அம்மையாரை சொல்லாம் தானே? இதோ இந்த ஒலித்தொகுப்பில் அம்மையாரைப் பற்றிய அறிய தகவல்களுடன் அவர் பாடல்கள் அவர் ஒலிக்கவிட்ட மணியான பாடல்கள் கேட்டு மகிழுங்கள். உங்கள் உணர்வுகளையும் எழுதுங்கள் அன்பர்களே.

1.பழம் நீயப்பா ஞானப்பழம்
2.பொறுமை என்னும் நகை அணிந்து
3.ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
4.தகதகவென தகதகவென ஆடவா
5.கேளு பாப்பா கேளூ பாப்பா
6.ஜெயம் உண்டு பயம் இல்லை
7.சென்று வா மகனே

Get this widget | Track details | eSnips Social DNA



2Clik here for Download / த்ரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

உனக்கென்ன மேலே நின்றாய்...


1234 ....

தகதகதினதத ததம்தோம்....
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ  நந்தலாலா(2)
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம் தமிழ்மடியில் வளர்ந்தோம்
நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
தகினதத ததம்தோம்

ஆடாத மேடை  இல்லை போடாத வேஷம் இல்லை(2)
சிந்தாத கண்ணீர்  இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை (2)
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு (2)
பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2)
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா (உனக்கென்ன மேலே )


படம் : சிம்லா ஸ்பெஷல்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

சிவா மனசுல சக்தி - ஒரு கல் ஒரு கண்ணாடி





ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டால் காதல் வந்தால் ஓஓ
கண்ணீர் மட்டும் துணையாகுமே
(ஒரு கல்..)

திமிருக்கு மறுப்பெயர் நீதானே
தினம் தினம் முன்னால் இருந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீயென புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னைத்தொட வந்தேனே
தெறிந்தே சுகமாய் எறிந்தேனே
கடும் விசத்தினை எடுத்துக் குடித்தாலும்
அடிக்கொஞ்ச நேரம் கழித்தே உயிர்ப்போகும்
இந்தக் காதலிலே உடனே உயிர்ப்போகும்
காதல் எனால் பெண்ணே சித்திரவதை தானே
(ஒரு கல்..)

உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்
காதல் என்றால் மெல்ல சாதன் என்று சொல்லும்
(ஒரு கல்..)

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: அட்னான் சாமி

Wednesday, May 6, 2009

யாவரும் நலம் - சின்னக் குயில் கூவும்



சின்னக் குயில் கூவும் சங்கத்தமிழ் பாடும்
கண்ணின் இமைகள் திறந்திடும் காலை இது
சொந்தங்களை நாடும் சோம்பலுடன் தேடும்
புத்தம் புதிதாய் பிறந்திடும் வேளை இது
மழைத்துளி ஆயிரம் கடல் மடி தேடுதே
அலைகளாக மாறி துள்ளி ஆடிடவே

பட்ட பகல் வானம் வந்து விளையாடும்
வந்து விழும் மேற்கு நோக்கி ஒரு சூரியன்
வந்த கணம் மேலே வெள்ளி வாலி போலே
வந்து விழும் வெண்ணிலா
(பட்ட..)

அடித்தால் அன்று தானே என்று அதை
தள்ளி விட்டுச் சென்றிடுமே
தோளோடு மறைந்திடும் வலி மனதில் சேர்வதில்லை
அணைத்தால் கோழிக்குஞ்சை போல வந்து
இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொள்ளும்
அன்பெனும் கதகதப்பிலே கௌரவம் பார்ப்பதில்லை
ஓ மழைத்துளி ஆயிரம் கடல் மடி தேடுதே
அலைகளாக மாறி துள்ளி ஆடிடுவே
(பட்ட..)
(சின்ன குயில்..)

படம்: யாவரும் நலம்
இசை: ஷங்கர் எசான் லோய்
பாடியவர்: கார்த்திக்

நதியோரம் நாணல் ஒன்று ...



நதியோரம் ..நதியோரம்
நாணல் ஒன்று
நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல-நதியோரம்

நதியோரம் நதியோரம்
நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல -நதியோரம்

வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு-ஓடுவதென்ன?
மலையை மூடுவதென்ன?
முகில் தானோ துகில் தானோ(2)

சந்தனக் காடிருக்கு.. தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள..
நானந்த ஆனந்தம் என் சொல்ல


தேயிலைத் தோட்டம் - நீ
தேவதையாட்டம் துள்ளுவதென்ன
நெஞ்சை அள்ளுவதென்ன
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம் - நல்ல
முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல
நானந்த ஆனந்தம் என் சொல்ல

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுசீலா
திரைப்படம்: அன்னை ஓர் ஆலயம்
இசையமைத்தவர்: இளையராஜா

Last 25 songs posted in Thenkinnam