Thursday, May 20, 2010

கண்களே கமலாலயம் - பலே பாண்டியா (2010)




கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலை போல் வரும்
கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலை போல் வரும்

அலைகளிலே நான் மிதந்தேன்
அணுஅணுவாய் எனை இழந்தேன்
இழந்த காலம் என்னை துரத்த
இனிய காலம் என்னை அணைக்க
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
மயங்கிடும் கண்களே கமலாலயம்


கனவுகள் கண்டு நான் எழுந்தேன்
இரு கருவிழி தீண்டி நான் விழுந்தேன்
சொல்ல நினைத்தேன் வேண்டாமென்று
சொல்லி முடித்தேன் ஆமாமென்று
இரவு முடிந்தும்
போக மறுக்கும்
இனிய நிலவே

நிலவுகள் துரத்த நான் நடந்தேன்
உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன்
உன்னை அன்றி யாரை நினைப்பேன்?
உருகும் உயிரை எங்கு புதைப்பேன் ?
காலை வந்தும்
கலைய மறுக்கும்
இனிய கனவே

கனவுகள் இங்கே அலை போல் வரும்
கண்களே கமலாலயம்


இது நடந்திடுமா கரை கடந்திடுமா
இது அலையல்லவா கடல் இழுத்திடுமா

இழுக்கட்டுமே கடல் இழுக்கட்டுமே
நனைக்கட்டுமே உடல் நனைக்கட்டுமே

நனைந்த பின்பும்
மயங்கும் மயங்கும்
கண்களே கமலாலயம்

(கண்களே கமலாலயம் )

படம்: பலே பாண்டியா (2010)
இசை: தேவன் ஏகாம்பரம்
பாடல்: தாமரை
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், மிருணாளினி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam