Saturday, May 15, 2010

கள்வரே கள்வரே - ராவணன்




கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே

கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ

உம்மை எண்ணி உம்மை எண்ணி
ஊமைக் கண்கள் தூங்காது

தலைவா என் தலைவா
அகமறிவீரோ அருள் புரிவீரோ

வாரந்தோறும் அழகின் பாரம்
கூடும் கூடும் குறையாது

உறவே என் உறவே
உடை களைவீரோ
உடல் அணிவீரோ

என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்

என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னாய்
கண்ணாலே ஆமாம் என்பேனே

எங்கெங்கே உதடும் போகும்
அங்கெங்கே உயிரும் போகும்
அன்பாளா ஆளச் சொன்னேனே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்குத் தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்குத் தெரிகிறதே


(கள்வரே கள்வரே)


படம்: ராவணன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்:வைரமுத்து
பாடியவர்: ஸ்ரேயா கோஷால்

1 Comment:

Unknown said...

வளிமிகும், வளிமிகா - தமிழ்
வலிமிகும், வலிமிகா - தங்கள் ?

Last 25 songs posted in Thenkinnam