Friday, May 28, 2010

நெஞ்சில் ஒரு ஆலயம் - முத்தான முத்தல்லவோ

காயத்ரி - சித்தார்த்தின் குட்டி தேவதை அமுதினிக்காக சிறப்பு பதிவு :)


Get Your Own Hindi Songs Player at Music Plugin

முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
முத்தான முத்தல்லவோ

சின்னஞ்சிறு சிறகு கொண்ட சிங்கார சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ
செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ
மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
பூவின் மணமல்லவோ பொன்போன்ற முகமல்லவோ

முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
முத்தான முத்தல்லவோ

வாழாத மனிதரையும் வாழ வைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ
தாழம்குடையல்லவோ தள்ளாடும் நடையல்லவோ
மாலை பொழுதல்லவோ வண்டாடும் செண்டல்லவோ..

முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
முத்தான முத்தல்லவோ

படம் : நெஞ்சில் ஒரு ஆலயம்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர் : பி. சுசீலா

3 Comments:

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் காயத்ரி - சித்தார்த்துக்கும் பின்னே குட்டி தேவதைக்கும் :)


பாட்டு ஜூப்பர் செலக்‌ஷன் :)

MyFriend said...

அலோ யக்கா.. சுவரொட்டிலதான் நீங்க போட்டீங். இங்கயாவது நமக்கு சான்ஸ் கொடுத்திருக்கலாம்ல. ;-)

//ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் காயத்ரி - சித்தார்த்துக்கும் பின்னே குட்டி தேவதைக்கும் :)//

ரிப்பீட்டேய் போட்டு ரொம்ப நாளாச்சு.. குட்டி செல்லம் அமுதிக்காக இன்னைக்கு போடுறேன் ஒரு பெரிய்ய்ய்ய ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.... ;-)

பனித்துளி சங்கர் said...

ஆஹா மிகவும் அருமை பகிர்வுக்கு நன்றி

Last 25 songs posted in Thenkinnam