Saturday, May 15, 2010

பூஞ்சோலை கிளியே



பூஞ்சோலை கிளியே பொன்மாலை நிலவே
பூமாலை அழகே கண்ணை தீட்டிய கவிதையே
பட்டாள வீரா பாசாங்குக் காரா
என் வீடு நுழைந்து என்னை திருடிய திருடனே

மணமகளே எங்கள் மருமகளே
நல்ல மங்கலம் காட்டிடும் திருமகளே
குல மகளே கொஞ்சும் குணமகளே
மஞ்சள் குங்கும கோட்டின்
குடும்பத்தின் விளக்கே
(மணமகளே..)
(பூஞ்சோலை..)

நீரோடை போல உடல் நெளிகின்ற அழகு
நீராட என்னை அன்பாய் அழைக்கும்
நீராடும் போது குளிர் அடிக்கின்ற சாக்கில்
என் மீது சாயும் எண்ணம் தோன்றும்
அடிப்பெண்ணே பெண்ணே உன் பெண்மேனி பூமேனி
என் அன்பே அன்பே உன் பொன்மேனி திருமேனி
(அடிப்பெண்ணே..)
விழியோடு விழி சேரும் உடலோடு உயிர் சேரும்
(மணமகளே..)

ஒன்றாக உள்ளம் இனி சேர்கின்ற காலம்
மோகத்தில் இதழ்கள் இணையும் கோலம்
வியர்க்கின்ற போதும் நாம் வியர்க்கின்ற தேகம்
விடிந்தாலும் கூட டியா தேசம்
என் நெஞ்சே நெஞ்சே இனி உற்சாக கொண்டாட்டம்
என் அன்பே அன்பே உன் உல்லாச கூடாரம்
(என் நெஞ்சே..)
விழியோடு விழி சேரும் உடலோடு உயிர் சேரும்
(மணமகளே..)
(பூஞ்சோலை..)

படம்: அரண்
இசை: ஜோஷுவா ஸ்ரீதர்
பாடியவர்கள்: கார்த்திக், ஆஷா மேனன்
வரிகள்: நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam