Sunday, October 4, 2009

மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி - இருவிழி இரண்டும் கவிதைகள் படிக்க



இருவிழி இரண்டும் கவிதைகள் படிக்க
இதயத்தின் ஓசை இன்னும் அதிகரிர்க்க
கண்ணக்குழி சிரிப்பில் என்னை நானும் மறக்க
கால் கொலுசு சத்தத்தில் காய்ச்சல் அதிகரிக்க

என்னவளின் அழகை நான் சொல்ல
என்ன என்ன கவிதை நான் சொல்ல
என்னவளின் அழகை நான் சொல்ல
என்ன என்ன கவிதை நான் சொல்ல
சின்ன இதழ் சிரிப்பில் செந்தமிழும் பிறக்க
செம்பருத்திப் போல கன்னம் இரண்டும் சிவக்க
முத்துப் பற்கள் இரண்டும் மெல்ல நகம் கடிக்க
சிக்கிக் கொண்ட விரலில் என் மனதும் இருக்க
கால் குழலும் கணைந்து காற்றினிலே பறக்க
காயம் பட்டு மனதில் காதல் வலி எடுக்க
என்னவளின் அழகை நான் சொல்ல
என்ன என்ன கவிதை நான் சொல்ல
(என்னவளின்..)

செல்ல முகம் சினுங்க மெல்ல வளையல் குலுங்க
சொல்ல மொழி மறந்து என் மனது கிறங்க
மண்ணில் விழும் நிழலும் எந்தன் பிம்பம் மறக்க
உந்தன் பிம்பம் எழுந்து எண்ணில் வந்து கலக்க
ஜன்னல் வழித் தெரியும் உன் முகத்தைப் பார்த்து
தன் தலையைக் கவிழ்க்கும் யுத்தம் புது நாத்து
(என்னவளின்..)

படம்: மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி
இசை: செவி
பாடியவர்: ஹரிசரண்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam