Monday, October 19, 2009

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா



கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்த காற்றை நிருத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
(கண்ணாமூச்சி..)

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா
உன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா
(கண்ணாமூச்சி..)

வான்மழை விழும்போது மழைக்கொண்டு காத்தாய்
காண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா
தினம் ஊசலாதுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
(கண்ணாமூச்சி..)

படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சித்ரா
வரிகள்: வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam