இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ
(இதோ..)
என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலா
நான் காணும் கோலமோ
என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ
பசியென்பதே ருசியல்லவா
அது என்று தீருமோ
(இதோ..)
அந்த வானம் தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம்
நம் பாசம் மாறுமா
ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடலாகிறேன்
விதி மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் க்ஊடுமா
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா
(இதோ..)
படம்: சிகரம்
இசை: SP பாலசுப்ரமணியம்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வைரமுத்து
Wednesday, October 28, 2009
இதோ இதோ என் பல்லவி
பதிந்தவர் MyFriend @ 2:55 AM
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், சித்ரா, வைரமுத்து
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
வாவ்..ச்சோ ச்வீட்..சூப்பர் பாட்டு :-)
yaa.. yaa.. so.. sweet kalakkal paattu
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ஆச்சரியம்... ரெண்டு நாளா இந்தப் பாடலை டெய்லி கேட்டுக்கிட்டு இருந்தேன்!
எப்போதும் என் உதடுகள் பாடும் மயக்க வரிகள்.....
எப்போதும் நான் கேட்கும் இனிமையான பாடல்களில் ஒன்று
super song இதோ இதோ என் பல்லவி - சிகரம் பாடல் வரிகள்
More Tamil song lyrics here
Post a Comment