Tuesday, October 20, 2009

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா



காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்பியூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆமபளையே தெரியாமன கொழந்தை பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
டப்பு மட்டும் வச்சிருந்தா போதும் நீங்க
தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்
பொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூபி எப்படி உய்யும்
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி
மஹா கணபதி மஹா கணபதி

கண்ணகிக்கு கோயில் கட்டும் கற்பு மிக்க நாடு இது
கற்புன்னா எத்தனை லிட்டர் புதுப்பொண்ணு கேட்குது
அட சேல பாவாட அது மலை ஏறிப்போச்சு
மிடியோடு சுடிதாறும் பொது உடையாகிப்போச்சு
போலி புன்னாக்கு பள்ளி எதுக்கு தந்தாலே பட்டம் இருக்கு
ஏட்டில் உள்ளது ஒழுக்கம் அது ரோட்டில் வந்தாலும் வழுக்கும்
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி
மஹா கணபதி மஹா கணபதி

அண்ணனுக்கு ஜே காதல் மன்னனுக்கு ஜே மரத் தமிழனுக்கு ஜே
நம்ம தலைவனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே
தலைவனுக்கு ஜே ஜே

திரையில பொய்களை சொன்னா சாதிசனம் நம்புது
கருத்துல்ள கவிஞன் சொன்னா காத தூரம் ஓடுது
அட சத்துள்ள தானியம் அது காணாமப் போச்சு
வெறும் பொக்குள்ள அரிசி பொது உணவாகிப் போச்சு
பாசம் கண்ணீரு பழைய தொல்லை
தாயே செத்தாலும் அழுவதில்லை
அட ஏழுக்குண்டலவாட இது இன்னைக்குத் திருந்தும் நாடா
இதப் பார்க்கப் பார்க்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆற்றில் கரையுது
மஹா கணபதி மஹா கணபதி
மஹா கணபதி மஹா கணபதி
(காலம்..)

படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

1 Comment:

சீனு said...

//போலி புன்னாக்கு பள்ளி எதுக்கு தந்தாலே பட்டம் இருக்கு//

ஒரு வார்த்தை மிஸ்ஸிங்

//வெறும் பொக்குள்ள அரிசி பொது உணவாகிப் போச்சு
பாசம் கண்ணீரு பழைய தொல்லை//

வெறும் தொப்புள்ல அரிசி பொது உணவாகிப் போச்சு

பாசம் கண்ணீரு பழைய கத

Last 25 songs posted in Thenkinnam