மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திரு தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்த கோயிலின் மணி வாசலை
இன்று மூடுதல் முறையோ
(மணியோசை..)
கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தாள் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் ஆ..
கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தாள் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்
பேசக் கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் முகம் வாடாலாமோ
வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ
(மணியோசை..)
பாதை மாறிப் போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போகும்போது
ராகம் தோன்றாது
பாதை மாறிப் போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போகும்போது
ராகம் தோன்றாது
பாடும் புது வீணை இங்கே
ராகம் அதில் மாறும் அங்கே
தாளம் மாறுமோ ராகம் சேறுமோ
(மணியோசை..)
படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
Friday, October 30, 2009
மணியோசை கேட்டு எழுந்து
பதிந்தவர் MyFriend @ 1:05 AM
வகை 1980's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
aaha aaha SuPerup.... SuPerB. Thx for posting.
Post a Comment