Friday, October 9, 2009
மனதிலே ஒரு பாட்டு
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழிப்பூவும் மலரும் காலை நேரம்
(மனதிலே ஒரு பாட்டு)
காற்று பூவோடு கூடும்
காதல் சங்கீதம் பாடும்
பார்த்து என்னுள்ளம் தேடும்
பாசம் அன்போடு மூடும்
இதயம் போடாத லயமும் கேட்டு
இளமை பாடாத கவிதை பாட்டு
இமைகளில் பல தாளம்
இசைகளை அது கூறும்
இரவிலும் பகலிலும்
உனைப் பார்த்து பார்த்து பார்வை வாடும்
(மனதிலே ஒரு பாட்டு)
நீயும் நூறாண்டு வாழ
நேரம் பொன்னாக மாற
நானும் பாமாலை போட
தோளில் நான் வந்து சூட
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
எழுந்து வா இளம்பூவே
இசையிலே அழைத்தேனே
இனிமைகள் தொடர்கதை
இனி சோகம் ஏது சேரும் போது
(மனதிலே ஒரு பாட்டு)
படம்: தாயம் ஒண்ணு
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:04 PM
வகை 1980's, P சுசீலா, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, கங்கை அமரன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment