Wednesday, October 7, 2009

சின்னஞ்சிறு வயதில்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்

கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தளம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ......

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

படம்: மீண்டும் கோகிலா.
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.பி. ஷைலஜா
இசை: இளையராஜா.
வரிகள்: கண்ணதாசன்.

5 Comments:

ஆயில்யன் said...

ஹைய்ய்ய் தங்கச்சி இங்கன பாட்டு பா(போ)ட வந்திருச்ச்சுடோய்ய்ய்ய்ய் :)

ஆயில்யன் said...

கண்ணதாசன் வரிகள் இன்னுமொரு அருமையான பாடல் :)

கானா பிரபா said...

பொண்ணு பார்க்க வந்தபோது மாப்ள இந்தப் பாட்டு தான் பாடினாரா தங்கச்சி

Unknown said...

நன்றி ஆயில்யன் அண்ணா. :)) எனக்குமே ரொம்ப பிடிச்ச பாட்டு இது :))

நன்றி பிரபா அண்ணா. ம்க்கும் பாடிட்டாலும்... ;)))

எம்.எம்.அப்துல்லா said...

//பொண்ணு பார்க்க வந்தபோது மாப்ள இந்தப் பாட்டு தான் பாடினாரா தங்கச்சி //

கானா அண்ணா, விட்டா உங்க வீட்டு குட்டீஸ் யாராவது அவர்மேல உச்சா போனாங்களான்னுகூட கேப்பீங்க போல :)))

Last 25 songs posted in Thenkinnam