இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
(இதழில்..)
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுத
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திருமோ
காளை மனம் அதுவரை பொருத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
(இதழில்..)
தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும்
சுந்தர நிலவோ
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது
(இதழில்..)
படம்: உன்னால் முடியும் தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள் : கவிஞர் முத்துலிங்கம்
4 Comments:
சில பிழைகள் உள்ளன உங்களது பதிப்பில் நண்பரே
//ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
//காளை மனம் அதுவரை பொருத்திடுமோ
//தேகம் இது விருந்துகள் படைத்திடும்
//அழகைச் சுமந்து வரும் அழகரசி
//நங்கை முகமென யாரதைச் சொன்னது
arun,
ivanga eppavum ippadithan boss , ennathayavathu elutha vendiyathu , thappunna sonnalum thirutha mattanunga , neenga sonnathu yethavathu mathichirukkanungala parunga..
done thanks..
Super nice
Post a Comment