Wednesday, October 21, 2009

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு



மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சுவரை கொல்லையிட்டு போனதில்லை
ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எறி அமிலத்தை வீசியவர் யாரும் இல்லை
(மேகங்கள்..)

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எறியும் உடலென்று தெரியும் பெண்ணே
என் இளமைக்கு தீயிட்டு எறிக்க மாட்டேன்
(மேகங்கள்..)

கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்
என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம்
அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்
(மேகங்கள்..)

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி
எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன்
என் இரவினைக் கவிதையாய் மொழி பெயர்த்தேன்
(மேகங்கள்..)

மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடி போகாதே ஊமைப்பெண்ணே
நாம் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி
(மேகங்கள்..)

படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

3 Comments:

Suresh Kumar said...

மிகவும் பிடித்த பாடல்

Anonymous said...

எனக்கும் மிகவும் மிகவும் பிடித்த பாடல் தான். ஆஹா ஆஹா அருமையான பாட்டு சரணஙக்ள் யாவுமே அபாரம். பாலுஜி குரலில் வைரமுத்து வரிகள் பால் மழை பொழிகின்றன என் மனதில் என்றென்றும். பகிர்விற்கு நன்றி.

சீனு said...

//மூச்சுவரை கொல்லையிட்டு போனதில்லை//

மூச்சுவரை கொள்ளையிட்டு போனதில்லை

//கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்//

கண்ணிமையில்(?)

//துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம்//

துண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம்

//செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்//

'உன்' செவ்வாயில்

மற்றபடி சிறிய சிறிய தவறுகள் உள்ளன (பல பாடல்களில்). குற்றம் சொல்லவில்லை. சுட்டிக் மட்டுமே காட்டுகிறேன்.

Last 25 songs posted in Thenkinnam