வருகிறாள் உன்னை தேடி >> வண்ணத்தமிழ் செல்லக்கிளி >> கலையோடு கலந்தது >> யவ்வனமே யவ்வனமே >> கூவாமல் கூவும் கோகிலம் >> ஆனந்தம் இன்றே ஆரம்பம் >> அய்யாசாமி ஆவோஜி சாமி >> சின்னஞ்சிறு கிளியே கண்னம்மா >> கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் >> குயிலே குயிலே >> அந்திமயங்குதடி ஆசை பெருகதடி.
மேற்கண்ட 11 பாடல்களின் பல்லவிகளை கேளூங்கள் தலையை சுற்றுகிறதா? சுற்றும் சுற்றும் ஏன் சுற்றாது? இந்த பாடல்கள் தொகுப்பின் மூலாதாரமானவர் மதராஸி லலிதாங்கி வசந்த குமாரி அவர்கள் தான். இந்த பாடல்களெல்லாம் சிலவற்றை தவிர இப்போது தான் கேட்கிறேன். அறிவிப்பாளர் திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் சொல்லுவது போல வெல்வெட் குரலையுடைய எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் பாடல்களை தேன் கிண்ணத்தில் கேட்பதே நமக்கும் பெருமைதானே.அந்தகாலத்திலே ஆச்சரியப்படுத்தும் பாடல்களை இப்போது கேட்பதே அவருக்கு மரியாதை செய்வது போல் ஆகும். பாடல்களை மட்டுமல்லாது நீங்களூம் கேளூங்கள் எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் அபூர்வ தகவல்களூடன். மிக மிக அழகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திருமதி ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்களூக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி. அப்படியே உங்கள் உணர்வுகளையும் எழுதுங்கள்.
|
பதிவிறக்கம் இங்கே
0 Comments:
Post a Comment