இசை ஜாம்பவான்களில் முன்னோடி அமரர் ஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் ஓராண்டு முடிந்த நினைவில் அண்ணாரின் நினவலைகளில் மூழ்கடிக்க கோவை வானவில் பண்பலையில் ஓர் அற்புதமான ஒலித்தொகுப்பு ஒலிப்பரப்பட்டது. அண்ணாரின் பாடல்கள் பலதடவை கேட்டிருக்கிறோம், அவரின் இசையமைப்பில் மயங்கியிருக்கிறோம். இருந்தாலும் மீண்டும் அவரின் பாடல்களை ஒலித்தொகுப்பாகவும் அதுவும் அவரின் அபூர்வ தகவல்களூடன் கேட்கும் போது ஓர் இனம் புரியாத சோகம் நம் மனதையும் எட்டிப்பார்க்கும். அவரின் இனிமையான பாடல்களை நமக்காக தன் குல்கந்த் குரலால் ஒரே சீராக வெள்ளி நூல் பிடித்தார் போல் அண்ணாரின் தகவல் முத்துக்களை கோர்த்து ஓர் முத்து சரமாக வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் திருமதி.சாரதா ராமாநாதன். இந்த ஒலித்தொகுப்பி அதிகபட்ச பாடல்கள் இறைவன் முருகன் மீது பாடப்பட்ட பாடல்களாக தேர்ந்தெடுத்து ஒலிப்பரப்பினாலும் துவக்கமே என் அபிமான ஆதர்ஸ பாடகரின் என்றென்றும் என் மனதை கவர்ந்த சரிமகமபதநி என்று துவங்கி முடிவில் சீர்காழியாரின் தனம் தரும் கல்வி தரும் என்று அமர்க்களமாக முடித்து இனிமையான இசையுடைய பாடலை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்தார் போல் துவங்கியது அதி அற்புதம். இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் “இறைவனை வழி படவே முன்னோர்கள் இசையே சிறந்தது என்று சொன்னர்கள்” என்ற வரிகள் மூலம் இந்த ஒலித்தொகுப்பை கேட்கும் ஓவ்வொரு மானிடரையும் இறைவனுக்கு அருகில் கொண்டு சேர்த்த பெருமை அவரையே சாரும். அதற்கு ஆதார அச்சாணியாக இருந்த குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசை இனிய பாலமாக அமைந்தது என்றால் மிகையாகாது. இந்த ஒலித்தொகுப்பை அழகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திருமதி.சாராதா ராமாநாதன் அவர்களுக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.
|
1.சரிகமபதநி இது சப்தஸ்வர ராகம் >> 2.அகரமுமாகி அதிசயமாகி >> 3.குன்றகுடி குமரய்யா >> 4.கல்லேல்லாம் சிலை செஞ்சான் >> 5.திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய்
6.திருப்பதி மலைவாழும் வெங்கேடசா >> 7.உலகெல்லாம் படைத்தவளே ஓங்காரி
8.ஓம் நமச்சிவாய >> 9.இன்னிசையால் செந்தமிழாய் இருப்பவனே >> 10.மருதமலை மாமுனியே முருகய்யா >> 11.தனம் தரும் கல்வி தரும்.
பதிவிறக்கம் இங்கே
4 Comments:
akila vijaya kumar
isai mahanubavar kunnakudi vaithiyanathanin valkai chuvadugal avarathu isayamaipil vantha padalgal ivatrai korvayaga anbu arivipalar saratha ramanathan sirapaga thanthullar
valthukal
வாங்க கார்த்திக்..
உங்கள் பாராட்டுக்கள் எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இது யாருடைய பின்னூட்டம் கார்த்திகா? அல்லது அகிலா விஜயகுமாரா? தெளிவு படுத்தவும். வருகைக்கு நன்றி.
podango.....
//podango.....//
Yaarappa ithu? Pathivu Pidikalaiya?
Post a Comment