Sunday, October 18, 2009

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா



சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொள்ளோ
பட்டுக் கருநீலப் புடவை படித்த நல் வைரம்
நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி

சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி
வாழைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் சாத்திரம் ஏதுகக்டி
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று

படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: பாரதியார்

1 Comment:

சகாதேவன் said...

//வாழைக் குமரியடி// இல்லை. வாலைக்குமரி.

இந்தப் பாடலை எம்.கே.தியாகராஜ பாகவதர் மிக அழகாக பாடியிருப்பார். அமரகவி என்ற படத்தில். கேட்டுப் பாருங்கள்.

Last 25 songs posted in Thenkinnam