Sunday, October 9, 2011

கனா ஒன்று கண்டேன் - நான்

கனா ஒன்று கண்டேன் - நான்
கனா ஒன்று கண்டேன்
என் முதுகுத்தண்டினில்
இறக்கை முளைத்து தான்
பறந்து போகக்கண்டேன்
கனா ஒன்று கண்டேன்

நிலா ஒன்று கண்டேன் -நான்
நிலா ஒன்று கண்டேன்
என் வீட்டு முற்றத்தில்
வீதியோரத்தில் நடந்து போகக்கண்டேன்

நீ யாரென்று தெரியாமல்
உன்னை ரசித்தேன்
உன் முகவரிகள் தெரிந்த பின்னே
உன்னுள் வசித்தேன்
உன் பார்வையிலே
காலிடறி உனக்குள் விழுந்தேன்
உன் புன்னகையின் கைபிடித்து
மீண்டும் எழுந்தேன்
விளையாட்டாய் பார்த்ததும்
விசுக்கென்று பூத்ததும்
தவறென்று தோணவில்லையே

ஓ அழகான பெண்ணையும்
ஆணான என்னையும் இப்போது
காணவில்லையே
ஒருநாளும் எனை நீயும் விட்டுப்போகாதே
ஒரு நாளும் உனைவிட்டு என் உயிரும் சாகாதே
நானும் கூட இதைத்தானே
கனாக்கண்டேன்
கனாக்கண்டேன்
(நிலா ஒன்று)

ஆ ஆ ஆ
என் இதயத்தின் பின் கதவை
நீதான் திறந்தாய்
எனைக் களவாடும் படபடப்பில்
உன்னுள் தொலைத்தாய்
என் முன் கதவைத்
தாழிட்டு உள்ளே இருந்தாய்
எனைக்கண்டதுமே நீ எங்கே ஓடி ஒளிந்தாய்
ஓ ஒரு பக்கம் நீ என்னை
ஒரு பக்கம் நான் உன்னைத்
தேடித்தான் பார்க்கவில்லையே
நீயாக நான் இங்கே
நானாக நீ எங்கே
வேறொன்றும் தேவையில்லையே
ஒரு நெஞ்சில் இரு ஊஞ்சல்
இனி ஆடும் சுகமாக
ஒரு தேடல் இரு ஊடல்
இனி தொடரும் இதமாக
இதை சொல்ல நானும் வந்து தானே
நிலாக்கண்டேன்
நிலாக்கண்டேன்

இசை: தீனா
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ , சங்கர் மகாதேவன்
திரைப்படம் : அந்தோணி யார்


0 Comments:

Last 25 songs posted in Thenkinnam