Thursday, October 27, 2011

ஏஜே ஏஜே மனம் மறைப்பதேன்?

படம் : 180
இசை : ஷரத்
பாடியவர்கள் : ரம்யா எஸ்.கபாடியா,விது ப்ரதாப்




ஏஜேஏஜே
மனம் மறைப்பதேன்? ஏஜே

பார்வை கூறும் வார்த்தை நூறு
நாவில் ஊறும் வார்த்தை வேறு
நாணம் தீரும் - நீ இவளைப் பாரு
மனதைக் கூறு
மனம் மறைப்பதேன்?…

நாடியைத் தேடி உனது
கரம் தீண்டினேன்
நாழிகை ஓடக் கூடா
வரம் வேண்டினேன்


அருகிலே வந்தாடும்
இருதயம் நின்றோடும்
திண்டாடும்

ஏஜே ஏஜே
மனம் மறைப்பதேன் ஏஜே

மேல்விழும் தூறல் எனது
ஆசை சொன்னதா?
கால்வரை ஓடி எனது
காதல் சொன்னதா?

மனதினை மெல்வேனோ?
சில யுகம் கொள்வேனோ?
சொல்வேனோ?

ஏஜே ஏஜே
மனம் மறைப்பதேன்?
ஏஜே

பார்வை கூறும் வார்த்தை நூறு
நாவில் ஊறும் வார்த்தை வேறு
நாணம் தீரும் - நீ இவளைப் பாரு
மனதைக் கூறு
மனம் மறைப்பதேன்?

3 Comments:

வல்லிசிம்ஹன் said...

அன்பு கயல் நேத்திக்குத் தான் இந்தப் படம் பார்த்தேன் தொலைக்காட்சியில். பாடல்கள் மிகவும் அருமை.
என்ன ஒரு இமோஷன்!!தான்க்ஸ் பா.

Shanmugam Rajamanickam said...

சூப்பரு,,,,,,

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி நானும் நேற்றுத்தான் பார்த்தேன். எனக்கும் படம் பிடித்திருந்தது அதுதான் இன்று இப்பாடலை இங்கே வலையேற்றினேன். :)

Last 25 songs posted in Thenkinnam