Saturday, October 15, 2011

மாப்பிள்ளை டோய் ! மாப்பிள்ளை டோய்!

இன்னிக்கு கர்வாச்சவுத் ஸ்பெஷல்.. :)


மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய்
மணியான மதராசு, மாப்பிள்ளை டோய்
மை லேடி டோய் மை லேடி டோய்
மனம் போலே வந்து வாச்ச, பெண் ஜோடி டோய்

காப்பியிலே பல் தேய்க்கிற, மாப்பிள்ளை டோய்
கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்
காப்பியிலே பல் தேய்க்கிற மாப்பிள்ளை டோய்
கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்

மாப்பிள்ளை டோய் மாபிள்ளை டோய்
மணியான மதராசு மாப்பிள்ளை டோய்

சோப்பாலே மூஞ்சி தோய்க்கிரா சுந்தரி டோய்
சுண்ணாம்பை, கொழச்சி பூசுரா, சுந்தரி டோய்
சோப்பாலெய் மூஞ்சி தோய்க்கிரா சுந்தரி டோய்
சுண்ணம்பை, கொழச்சி பூசுரா, சுந்தரி டோஸ்

மை லேடி டோய் மை லேடி டோய்
மனம் போலே வந்து வாச்ச பெண் ஜோடி டோய்

சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
மன்னாதி மன்னனுனு மன்னாதி மன்னனுனு,
மனசுக்குள்ளே நினைச்சிடுவார்

மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய்
மணியான மதராசு மாப்பிள்ளை டோய்

பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய்
பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய்
பெண்களுக்கு அழகாகுமோ?
ஸா ரி ஸ்
ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபடப மப
ஸா ரிஸ
ஸரிஸநி ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபதப
ஸரிமரி ஸநிதஸஸ ரிஸநித பமமப
தபம ரிக மகரிஸ

நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார்
நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார்
ஓயாத குறும்பை கண்டு, தீராத காதல் கொண்டேன்

பாடலைப்பாடியவர்கள் : ஏ.எம்.ராஜா, பி.லீலா
படம். மனம் போல் மாங்கல்யம்
பாடலாசிரியர் : சுரதா
இசை: ஏ.ராமாராவ்

1 Comment:

Lakshmi said...

ஓ இன்னிக்கு கர்வ சௌத்தா? இந்தப்பட்டுக்கேட்டே பல வருஷம் ஆச்சே. நன்றி

Last 25 songs posted in Thenkinnam