Monday, October 17, 2011

நிழல் என்றும் தூரமானதில்லை

நிழல் என்றும் தூரமானதில்லை
நிஜமென்றும் பாரமானதில்லை
மண்மீது நிலவு பூக்கும்
மாயையைப் போல
கண்முன்னே தோன்றும் காட்சி
நீ பாரு
கைக்கூடி வந்த காதல்
என்னாகும் கூறு
இதைக்கட்டிக்காக்கும் ஆளு
யார் பாரு


மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
கண்களைத் திறந்தே கனவுக்காணும் தான்
மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
வானவில்லில் அம்புகள் தொடுக்கும் தான்

என்றும் எங்கும் எப்பொழுதும்
உன் பேச்சே - அட
என்னுடலில் இருக்குது என்னாச்சே
நீயும் நானும் ஒன்றே என்று ஆயாச்சு -அட
வெய்யில் கூட வெண்பனிய போலாச்சு
அப்படியா தோன்றுது உனக்கு - அட
அப்படியே காட்டடி எனக்கு
இவ்வுலகம் முழுவதும் நமக்கு -அட
வேறுலகம் தேவைதானா எதுக்கு?

மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
நான்கு கண்கள் உள்ள ஜீவன் தான்
நோயே தான் நோயே தான்
காதல் என்றும் நோயே தான்
உடலில் புகுந்து உயிரை வாட்டும் தான்

காதல் கொண்டால் விந்தைகளும் நிகழும்
அட அவ்வப்போது அச்சங்களும் திரளும்
காதல் கொண்டால் இப்படித்தான் இருக்கும்
அதில் அச்சம் மடம் நாணம் கூட இனிக்கும்
இதயங்கள் செய்கின்ற கலகம்
அட எப்பொழுதும் அமைதியாய் விலகும்
இதைத்தான் விரும்புது உலகம்
தினம் இப்படித்தான் காதல் வந்து பழகும்

மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
உள்ளங்கையில் உலகைக் காட்டும் தான்
மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
உருவம் இன்றி உயிரும் வாழும் தான்

(நிழல்)

http://tamildot.com/K/Kumaran/Tamilmp3world.Com%20-%20Nizhal%20Endrum.mp3 இங்கே முழுதுமாகப் பாடலைக்கேட்கலாம்..

பாடலைப்பாடியவர்கள்: ராமு?, வினயா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
திரைப்படம் : குமரன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam