Sunday, October 9, 2011

குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு

குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்

அது எப்படி பாடுமய்யா அது எப்படி ஆடுமய்யா

ஆண் பிள்ளை முடி போடும் பொன் தாலிக்கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாள நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேல எனக்கென்ன கோபம்
ஓலைக்குடிசையிலே இந்த ஏழை பொறந்ததுக்கு
வந்தது தண்டனையா அது தெய்வத்தின் நிந்தனையா
இதை யாரோடு சொல்ல

குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்

எல்லார்க்கும் தலைமேலே எழுத்தொண்ணு உண்டு
என்னான்னு யார் சொல்லக்கூடும்
கண்ணீரை குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாரார்க்கு எதுவென்று விதி போடும் பாதை
போனாலும் வந்தாலும் அதுதான்
ஏழையின் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கோழை என்றே இருந்தேன் போனது கை நழுவி
இதை யாரோடு சொல்ல

குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமய்யா அது எப்படி ஆடுமய்யா

குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்

படம்: சின்ன தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam