Monday, October 10, 2011

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் (2)
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்னைச்)

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் (நின்னைச்)

துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)

பாடியவர் : இளையராஜா , பாம்பே ஜெயஸ்ரீ
இசை: இளையராஜா
திரைப்படம்: பாரதி
பாடல் வரிகள் : பாரதியார்

4 Comments:

ஷைலஜா said...

mmm பிடிச்சபாட்டு..பகிர்ந்தமைக்கு நன்றி

Sethu Subramanian said...

some minor corrections in the lyrics. Full text from a Bharathi kavthaigaL book is given below.
நின்னைச் சரணடைந்தேன்--- கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னை)

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னை)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்னை)

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் (நின்னை)

துன்ப மினியில்லை சோர்வில்லை, தோற்பில்லை அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்னை)
நல்லது தீயது நாமறியோம் அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! (நின்னை)

Sethu Subramanian said...

Jayashree mixes the last 2 caraNams. That is taking liberty with the poet's version. It is a "no, no". The poet is allowed poetic license but the musician has to follow the poet faithfully.

Batmanabane said...

Absolutely, I fully agree with Mr. nAradA.

Last 25 songs posted in Thenkinnam