Sunday, October 16, 2011

கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்?

கல்லாய் இருந்தேன்
சிலையாய் ஏன் வடித்தாய்?
சிலையாய் வளர்ந்தேன்
உயிரை ஏன் கொடுத்தாய்?

உன் நெஞ்சின் உணர்வுகள்
இங்கு என்னுள்ளில் புகுந்ததே
சொல்லில் வருமோ வருமோ
சொல்லை எடுத்துத் தருவாய்
கல்லாய் இருந்தேன்
சிலையாய் ஏன் வடித்தாய்?
சிலையாய் வளர்ந்தேன்
உயிரை ஏன் கொடுத்தாய்?


உனைப் பார்த்த கண்கள்
விலகாது எங்கும்
உன்னிலே பதியும்

சுழன்றாடும் கனவில்
சொல்லாது சென்று
சுகத்திலே அலையும்

யார்ரார்க்கு மண்ணில்
நிலைக்காது அழகு
காலத்தின் ஒழுங்கு

நீ எனக்குத் தந்த
நிலையான அழகில்
கூடுமோ வயது?

உன்னுடல் தனில்
என் உயிர்தனை
கலந்து என்றும் வாழ்வேன்

காலங்கள் நமை பிரிக்குமோ
சிலையோடு சேர்ந்து
கால நேரம் நின்றது
கல்லாய்
கல்லாய் இருந்தாய்
சிலையாய் உனை வடித்தேன்

என் கண்கள் கூறும்
நீ தந்த பாவம்
உனக்குத்தான் புரியும்

உன் நெஞ்சின்
உண்மை
சொல்லாமலிங்கு
எனக்குத்தான் தெரியும்

பரிமாறிக்கொள்ள
பரிபாஷை இங்கு
நமக்குத்தான் எதற்கு

உள் அன்புகொண்டு
உறவாடும் நம்மை
புரியுமோ பிறர்க்கு


ஆசையும் உளியின் ஓசையும்
எனது உயிரின் நாதமாகும்
காதலாய்
இதைச் சொல்லவா?
என்றும் அழியும் உலகில்
அழிந்துதிடாத உறவிது
கல்லாய் கல்லாய்

கல்லாய் இருந்தேன்
சிலையாய் ஏன் வடித்தாய்
சிலையாய் வளர்ந்தேன்
உயிரை ஏன் கொடுத்தாய்?

பாடலைப்பாடியவர்கள்: தான்யா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசை : இளையராஜா
திரைப்படம் : உளியின் ஓசை

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam