Sunday, February 10, 2013

விளையாட்டா படகோட்டி - தோனி



விளையாட்டா படகோட்டி - ஷ்ரேயா கோஷல்

விளையாட்டா படகோட்டி - ஹரிஹரன்


விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்

கரை காணா கடல் மேலே நீயும் நானும்
தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம்
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா

தத்தி தத்தி நீரில் ஆடி
சுத்தி சுத்தி சுழலும்போதும்
அக்கரைக்குப் போகத்தானே அல்லாடும்
எத்தனையோ புயலும் கண்டு
கொட்டுமழையில் பொறுமையும் கொண்டு
தொலைதூரம் சேரத்தானே தள்ளாடும்
தன்னோட வழியெல்லாம்
தன்னைத் தவிர துணையுண்டோ
திசையெல்லாம் வழியாகும்
ஒரு வழிதான் உனக்காகும்
எப்போது கரையைச் சேரும் ஓடம் ஓடம்

கட்டுமரம் என்றால் என்ன
வெட்டு பட்ட மரங்கள் தானே
கஷ்டப்படும் நீயும் நானும் அது போலே
பட்ட பாடு அலைகள் போலே
விட்டு விட்டு மோதிப் பார்க்கும்
எட்டி நிற்க திரும்பத் திரும்ப விளையாடும்
கடலிறங்கும் கட்டுமரம்
ஆழத்தை அறியாது
கடல் சேரும் நதியெல்லாம்
திரும்பித்தான் போகாது
முடிவில்லா முடிவுக்கேது முடிவு?

வெட்டுப்பட்ட காயம் தாங்கி
கட்டுமரம் வடிவம் கொண்டு
காட்டை விட்டு கடலில் வந்து கரை தேடும்
பட்டப்பகல் வெயிலில் காய்ந்து
நட்டநடு நிலவில் தோய்ந்து
வெட்டவெளி வானம் பார்த்து விளையாடும்
கடலில்தான் திரிந்தாலும்
ஆழத்தை அறியாது
கடல் சேரும் நதியெல்லாம்
திரும்பித்தான் போகாது
முடிவில்லா முடிவுக்கேது முடிவு?


 படம்: தோனி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், ஹரிஹரன்






0 Comments:

Last 25 songs posted in Thenkinnam