Friday, February 22, 2013

என்னுள்ளே என்னுள்ளே




என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ மோகம்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்


கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்


கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றி ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்றுப்பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப் போலே இன்பமேது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ மோகம்



என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்




படம்: வள்ளி
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: சுவர்ணலதா

2 Comments:

நாகை சிவா said...

//சுவை பட கேட்ட படல்களை எழுத்து வடிவில் தரும் அற்புதமான சேவையில் ஈடுபடும் குழுவிற்கு எனது பாராட்டுகளுடன் கூடிய வாழ்துகளும்.


நேயர் விருப்பத்தில் அழைப்பு விடுக்க முடிய வில்லை.அதனால் இதில் பதிவிடுகிறேன்
கமல் நடித்த படம் பேர் தெரியவில்லை.பாடல் வரி ஜூலீட்டா ஐ லவ் யூ,மை சுவீட்டி யு லவ் மீ அழகோ அழகு. . . //

நன்றி.

Senorita I love you
My Sweet heart You love me
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது

இந்த பாடலையா குறிப்பிடுக்கின்றீர்கள்? அப்படியானல் இது ஜானி, ரஜினிகாந்த் நடித்தது.

Uma said...

மிக அருமையாக பொறுமையுடன் பாடல் வரிகளை பதிவிடுகிறீர்கள் வாழ்த்துக்கள்

Last 25 songs posted in Thenkinnam