Saturday, February 9, 2013

சின்ன கண்ணிலே - தோனி

சின்ன கண்ணிலே -திரைப்பாடல்.காம்

சின்னக் கண்ணிலே என்ன கேட்கிறாய்
என் நெஞ்சின் கதைகளைப்
பிண்ணி வலைகளாய் வீசினாய்
இந்த புன்னகை எங்கு வாங்கினாய்
நீ தினமும் பூப்பதால்
நேற்று நாளையைத் தாண்டினாய்

இரு கை நீட்டி
சிறு தலையாட்டி
இரு விழியாலே
புது ஒளி கூட்டி
நான் வாழ வந்ததின்
அர்த்தம் சொல்கிறாய் கண்மணி
வைரமணிகளை சிரித்துத் தெளிக்கிறாய்
மழலைப் பூவே வா

புதியது குழந்தை உலகம்
நுழைந்திட வழிகள் வேண்டும்
குழந்தையின் வயதும் மனதும்
கிடைத்திட வரங்கள் வேண்டும்
ஒரு தீவில் பூக்கும்
சிறு பூவைப் போலே
இதழை திறந்து பேசும்
உனது மழலை போதும்
உன் மொழி தேன்மொழி
என் மொழி வீண்மொழி
உன்னிடம் உள்ளது தெய்வத்தின் தாய்மொழி
அந்த ஆகாயம் இந்த பூலோகம்
அதைப் பிஞ்சுவிரல்களால் தாங்கிப் பிடிக்கிறாய் எப்படி?

நடைவண்டி பழகும் வயதில்
நடந்திட நானும் முயன்றேன்
நடந்திட கடந்த தூரம்
உனக்கது தொடர வேண்டாம்
இந்த உலகின் அழகை
நீ அழகு செய்தாய்
உன் சிரிப்பின் ஒளியில்
இரவை வெளிச்சம் செய்தாய்
உன்னிடம் பாடல்கள் எத்தனை உள்ளது
என்னிடம் கேள்விகள் மட்டுமே உள்ளது
சிறுகை தீண்டி என் மெய் தீண்டி
என் கர்வம் யாவையும் தீர்த்துப் போகிறாய் எப்படி?


படம்: தோனி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷால், நரேஷ் ஐயர்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam