Thursday, June 3, 2010

பத்து விரல் உனக்கு



பத்து விரல் உனக்கு பத்து விரல் எனக்கு
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு
ஒன்ன தொட்ட விரல் தான் தித்திக்குது எனக்கு
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு

மூங்கில் காட்டு வண்டி என் மூலை கொடையும் அண்டி
உன் பத்து விரலின் பசியை போக்கும் பந்தி நாந்தானா?
அடி கொல்லைக்கார கண்ணே
சிறு கொலைகள் செய்யும் பெண்ணே
அட எட்டி போனா என்ன பண்ண விட்டு செல்வேனே ஓ

திமிர் கொண்ட அழகை மறப்பது கடமை
திரை விளக்காமல் பறிப்பது உன் திறமை
அழகை மறைச்சா அது கொடுமை
(பத்து...)

மனச கிள்ளு மனுஷா
அட மன்மத பாஷை பெருசா
உடைக்கையில் துளைக்கும் பார்வைகலாலே
உள்ளுயிர் வரைக்கும் தடவுகின்றாய்
விரல்கள் செய்யும் வேலைகள் எல்லாம்
விழிகளிலாலே நடத்துகிறாய்
உன் வயச பார்த்தா கொஞ்சம் தானே
ஆனா உன் வயச மீறி நெஞ்சம் தானே
(பத்து..)

வெட்கம் காணோம் ஐயா
அதை திருடி போனவன் நீயா
எதுவும் ஒட்டாதே பாதரசம் போலே
இதுவரை இருந்தேன் தனிமையிலே
ஓசையில்லாத பிம்பத்தை போலே
விழுந்து விட்டாயே மனசுக்குள்ளே
இன்னும் இன்னும் ஆளம் போறேன்
உன் இதயத்துக்குள் புதயல் எடுப்பேன்
(பத்து..)

படம்: அருள்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா
வரிகள்: வைரமுத்து

1 Comment:

Anonymous said...

65 ஆம் ஆண்டு அகவையில் அடியெடுத்து வைக்கும் என் அன்பு அண்ணா பாலுஜி அவர்கள் நீடுழி பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். கோவை ரவி மற்றும் கோவை பாலுஜி ரசிகர்கள்.

Last 25 songs posted in Thenkinnam