Sunday, June 27, 2010

ஓடக்கார மாரிமுத்து ஓட்டைவாயி மாரிமுத்து



ஏ ஓடக்கார மாரிமுத்து ஓட்டைவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா
ஏ அரிசிக்கடை ஐயாவுப் பொண்ணு ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா
பழைய பாக்கி இருக்குதா பையன் மனசு துடிக்குதா
பழைய பாக்கி இருக்குதா பையன் மனசு துடிக்குதா
பட்டணத்து ஸ்டைலக்கண்டா பட்டிக்காடு கசந்திடுமா
பள்ளிக்கூட நெனப்பிருக்கே பாவி மனம் மறந்திடுமா
பட்டுப்பாவடைக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்டை ஜடை கண்ணில் மிதக்குது
(ஓடக்கார..)

குண்டுப் பொண்ணு கோமளவள்ளி என்னானா என்னானா
ரெட்டைப்புள்ள பொறந்ததுமே நூலானா நூலானா
குள்ள வாத்து டீச்சர் கனகா
ஐயோ பார்வையில பச்ச மொளகா
மேற்படிப்பு படிக்கப் போனா மேர்க்கொண்டு என்ன ஆனா
மொத்தத்துல மூனு மார்க்கில் ஃபெயிலானா ஃபெயிலானா
ஒள்ளிக்குச்சி ராஜமீனா ஓடிப்போனா என்ன ஆனா
பூசணிக்கா வயு வாங்கித் திரும்பி வந்தாளே
(ஏ ஓடக்கார...)

அம்மன் கோயில் வேப்பமரம் என்னாச்சு என்னாச்சு
சாதிச் சண்ட கலவரத்துல ரெண்டாச்சு ரெண்டாச்சு
மேளத்தெரு கருப்பையாவும் கீழத்தெரு செவத்தம்மாளும்
சோளக்காட்டு மூளையில ஜோடி சேர்ந்த கதை என்னாச்சு
மூத்த பொண்ணு வயசுக்குத்தான் வந்தாச்சு வந்தாச்சு
மத்த கதை எனக்கெதுக்கு எங்குருவி எப்படி இருக்கு
தாவிச்செல்லும் குருவி இன்னிக்கு தாவணி போட்டிருக்கு
(ஏ ஓடக்கார..)

படம்: இந்திரா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், S சிவா
வரிகள்: வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam