Get Your Own Hindi Songs Player at Music Plugin
உந்தன் விழி முனை கத்தி
என்னை கொல்லுதடி பல்லே பல்லே
உந்தன் சிரிப்பினில் நெஞ்சம்
இப்போ தழும்புது பல்லே பல்லே
கன்னக்குழிகளில் உயிர் இன்று
வழுக்குது பல்லே பல்லே
குளிர் கூந்தலில் குண்டுமல்லி
பூவுக்கு பல்லே பல்லே
உந்தன் விழியில் எறும்பு
எந்தன் அழகில் கரும்பு
கரும்பினை எறும்பின்று வலைச்சாச்சு
அட மென்னு மென்னு முழுசையும் முடிச்சாச்சு
(உந்தன் விழி..)
ஏகானந்த நேரத்தில் எங்கேயோ தூரத்தில்
எனை கூட்டி போகின்றாய் பல்லே பல்லே
கனியாடும் மலை மீதும் கற்கண்டு சிலை மீதும்
விளையாட வைக்கின்றாய் பல்லே பல்லே
முத்தாடும் முத்துக்கள் மனி முத்துக்கள்
துள்ளிக்குதிக்கின்ற மழை பாருங்கள்
தாகங்கள் கை நீட்டி கேட்கின்றதே
மழை நாளெல்லாம் தூரட்டும் பல்லே பல்லே
(உந்தன் விழி..)
புல் மீது பனியாக உன் மீது நான் சாய்ந்து
வழிகின்ற நேரங்கள் பல்லே பல்லே
இரவெல்லாம் தூங்காமல் பனி அள்ளி குடிக்கின்றதே
ஒரு சூரியன் ஆனேனே பல்லே பல்லே
மன்மத வானத்தில் விண்மீன்களா
கோடி நிலா முத்தம் நாம் சிந்தலாம்
கன்னத்தில் கன்னத்தை வைத்து கொண்டு
வண்ணக்கியாக பறக்கின்ற காலம் பல்லே
(உந்தன் விழி..)
படம்: 4 ஸ்டூடண்ஸ்
இசை: ஜேஸ்ஸி கிஃப்ட்
பாடியவர்கள்: ஜேஸ்ஸி கிஃப்ட், கங்கா
வரிகள்: நா. முத்துக்குமார்
Sunday, June 13, 2010
உந்தன் விழி முனை
பதிந்தவர் MyFriend @ 1:22 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment