அழகிய அதிசய ஸ்வரமே
உன்னை லயக்குது ரசிக்குது மனமே
ஹே பரப்பா
ஒரு நொடி இரு நொடி சில நொடி பல நொடி
ஜகத்தினில் சகலமும் மறக்க
வாயோடு முத்தம் இட்டு தீ மூட்டினாய்
பார் என் இருதயம் பாதி ஆச்சு
கேள் என் மனதுக்குள் காச்சு மூச்சு
ஆரம்பம் என்பது சைவ சேட்டைதான்
ஆடைகள் கலைந்ததும் வேறு வேட்டைதான்
உயிருக்குள் புகுந்து விட்டாய்
(ஒரு நொடி..)
போர்க்களம் உருவாகும் என் போர்க்குலம் உனதாகும்
பூவில் பெண் பூவில் தேன் நீ வார்த்திடு
ஐவிரல் உளி என்றே என் தேகத்தில் பதியவிட்டு
அங்கத்தில் எங்கும் சிற்பம் செய்திடு
ஹேய் முதல் முதல் உந்தன் முழு பௌர்ணமி
உடல் பார்த்து வேர்த்தேன்
தணுவரை ஏதோ அசைந்தோடவே அதில் காயம் ஆனேன்
சின்ன சின்ன சீண்டள்கள் செய்தால்தான் ஆனந்தம்
டோலிரி டோலிரி டோலி டோலி டோலி
எல்லை மீரல் என்றாலும் இன்பங்கள் ஏறலாம்
வாழ்நாட்கள் போதாது போதாது போதாது
பார் என் இருதயம் பாதி ஆச்சு
கேள் என் மனதுக்குள் காச்சு மூச்சு ஹேய் ஹேய்
ஹேய் சுட சுட என்னை சுகம் செய்திட முகம் சேர்த்திட வா
தொட தொட எந்தன் உடல் நாணமும் உடைக்கின்றது வா
அன்பே உன்னை நான் அள்ளி ஆடைக்குள் சேர்த்தேனே
டோலிரி டோலிரி டோலி
போதும் போதும் என்றாலும் கொஞ்சித்தான் கொல்வேனே
நீ என்னில் உள்வாங்க உள்வாங்க
பார் என் இருதயம் பாதி ஆச்சு
கேள் என் மனதுக்குள் காச்சு மூச்சு
ஆரம்பம் என்பது சைவ சேட்டைதான்
ஆடைகள் கலைந்ததும் வேறு வேட்டைதான்
உயிருக்குள் புகுந்து விட்டாய்
(ஒரு நொடி..)
படம்: பாரிஜாதம்
இசை: தரன்
பாடியவர்கள்: ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஸ்வேதா, கார்த்திக்
Sunday, June 6, 2010
ஒரு நொடி இரு நொடி சில நொடி பல நொடி
பதிந்தவர் MyFriend @ 1:10 AM
வகை 2010, கார்த்திக், தரண், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஸ்வேதா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment