இயற்கை தாயே தாயே
உன் குழந்தைகள் பாடுகின்றோம்
தண்ணீர் திடலின் மேலே
தினம் சடுகுடு ஆடுகிறோம்
விரையும் படகே விரைக
விண்மீன் நுணியை தொடுக
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
(இயற்கை..)
வானம் பக்கம்தான் நம் வாழ்க்கை பக்கம்தான்
தோளில் சக்தி உள்ளவனுக்கு சொர்கம் பக்கம்தான்
வாழ்வே யுத்தம்தான் அதில் வலிமை தர்மம்தான்
நீதி இருதியில் வெல்லும் என்பது சான்றோர் சட்டம்தான்
ஆழ கடலை அஞ்சாத மனிதன் மட்டையை ஜெயிக்கிறான்
போலி புகலில் வீழாத மனிதன் தன்னையே ஜெயிக்கிறான்
ஹேய் வண்ண வண்ண சிறகுகள் வானத்தையே ஜெயிக்குமே
சின்ன சின்ன துடுப்புகள் கடலையே ஜெயிக்குமே
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
(இயற்கை..)
உப்புத்தண்ணீரா இது உப்புத் தண்ணீரா
காலம் எல்லாம் ஏழை சிந்தியா
கருப்பு தண்ணீரா மழையும் தீர்ந்துவிடும்
அட மண்ணும் கலந்துவிடும்
அன்று கடல் நீர் கொண்டு மனிதன் வாழ
கற்றுத்தருவீரா துள்ளி நீர் கூட்டம்
ஒன்றாகித்தானே கடலென்று ஆனது
மனிதர் கூட்டம் ஒம்றாகும் போது
பலம் வந்து வண்ணம் சிறகுகள் வானத்தையே ஜெயிக்குமே
சின்ன சின்ன துடுப்புகள் கடலையே ஜெயிக்குமே
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
ஒஹோஹோ ஐலேஸா
(இயற்கை..)
படம்: இயற்கை
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக், சைந்தவி
வரிகள்: வைரமுத்து
Monday, June 14, 2010
இயற்கை தாயே தாயே
பதிந்தவர் MyFriend @ 1:48 AM
வகை 2000's, கார்த்திக், சைந்தவி, வித்யாசாகர், வைரமுத்து
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment