உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
உண்மை கண்டார் யார் யாரு கூறாய்
உள்ள கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகுமே சீராய்
ஏ சாலையே ஏ சாலையே எங்கே போகிறாய்
என்னோடு தான் என்னென்னத்தான் நீ சொல்கிறாய்
ஏ சாலையே ஏ சாலையே எங்கே போகிறாய்
என்னோடு தான் என்னென்னத்தான் நீ சொல்கிறாய்
எத்தனை இனிய செய்திகளோ
எல்லாம் நிலைக்கும் நீதிகளோ
எத்தனை கால்கள் சென்றனவோ
எத்தனை கதைகள் வென்றனவோ
(உன்னை கேளாய்..)
அங்கங்கே மேடும் உண்டு
அங்கங்கே பள்ளம் உண்டு
அதை வெல்லும் உள்ளும் செல்லும் நேராய்
(உன்னை கேளாய்..)
கல் என்ன காலம் என்ன எல்லாமே
கண்டேனே கண்ணீரே எல்லாமே
ஆகாயம் சொல்லும் இதை கேளாயோ
பூவுக்குள் சோடிக்கிளி பாராயோ
மேகத்தை கேளு சொல்லும்
என் ராகத்தை அதுவும் சொல்லும்
அம்மம்மா இயற்கை எழுதும் புது புதுதாய்
சோகங்கள் பொய்யடா
சுமை நீக்கி வெல்லடா
மனம் என்ற வீட்டை நீ
தினம் சுத்தம் செய்யடா
நம் கைக்குள் முத்து போல்
மரத்துக்குள் விட்டு போல்
உன் வாழ்க்கை என்பதும்
உள்ளத்தில் உள்ளதடா
(உன்னை கேளாய்..)
மழை மேகத் தூரலை எல்லாம் மலைகள் வாங்க
அது தந்த குளிர் நீரை தான் ஓடைகள் தாங்க
நதியை போல் அது தான் மன்னே பெருகுது இங்கே
நெடுகடலை தேடி செல்லும் கங்கை அங்கே
கங்கையில் நீராடினால் பாவங்கள் போகலாம்
அசல்கள் போகுமா
(சோகங்கள்..)
(உன்னை கேளாய்..)
படம்: தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன்
வரிகள்: வாலி
Friday, June 18, 2010
உன்னை கேளாய் நீ யாரு
பதிந்தவர் MyFriend @ 2:27 AM
வகை 2000's, AR ரஹ்மான், வாலி, ஹரிஹரன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment