Saturday, June 19, 2010

மதுரைக்கு போகாதடி



கற்பூர கன்னிகையே வாராய்
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராஇ
நீ மங்கள மஹராணியே
வலது கால் எடுத்து வாராய் நீயே
நீ வந்த இடம் வளமாக
சென்ற இடம் வளமாக
சேர்ந்த இடம் சுகமாக
வாழ போற

மதுரைக்கு போகாதடி
அங்க மல்லி பூ கண்ணை வைக்கும்
தஞ்சாவூர் போகாதடி
தல ஆட்டாம பொம்மை நிக்கும்
தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா அங்க மேகம் உன்னை சுத்தும்

அசருதே அசருதே ஊர் மொத்தமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அசருதே அசருதே ஊர் மொத்தமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
(கற்பூர..)

அடி ஒத்தயிலே தனியாக
மெத்தையிலே தூங்காத
அத்த மகன் வாராண்டி
வலைச்சுப்போட
(மதுரைக்கு..)

சித்திரைன்னா வெயிலடிக்கும்
கார்த்திகைன்னா மழையடிக்கும்
அடால் குடால் தடால் புடால்
மாப்பிள்ளைதான் தங்கம்
ஆடியினா காத்தடிக்கும்
மாழ்கழின்னா ஹஹஹஹா
டமால் டமால் கபால் கபால்
மாப்பிள்ளை தான் சிங்கம்

மறுதாணி தோட்டத்துக்கே
அட மறுதாணி யாரு வச்சா
ஓ தேரா தேரா
இவ வாரா வாரா

காட்டு குயிலும் கட்டிக்க தான்
தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே
ஜோய் ஜோரா ஜோரா
வரும் வீரா வீரா
நான் அக்கரையில் இருந்தாலும்
இக்கரையில் இருந்தாலும்
சக்கரையா இருப்பாளே ஆசையாலே
(மதுரைக்கு..)

மருமக மருமக வந்தாச்சம்மா
இனி மாமியார் பதவி தான் உனக்காச்சம்மா

தமிழ்நாட்டு மன்மதனே வாராய்
பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய்
நீ இந்திர மஹராஜனே
வெற்றி வாலுக்கென பிறந்தவனே
நீ தொட்டதெல்லாம் ஜெயமாஅ
சொன்னதெல்லாம் நிஜமாக
கன்னி நிலா வந்துடுச்சு கனவு காண

கெட்டி மேளம் நாதஸ்வரம்
அட சேர்ந்து கேட்கும் நேரம் சுகம்
டும் டும் டும் டும்
டு டு டு டு டு
டும் டும் டும் டும்

மஞ்சள் குங்கும தாலியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறுப்பு

டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும்

சந்திரனில் ஒரு பாதி
இந்திரனில் ஒரு பாதி
சுந்தரனே என் ஜோடி ஆனதென்ன
(மதுரைக்கு..)

படம்: அழகிய தமிழ் மகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: அர்ஜித், பென்னி தயால், தர்ஷனா
வரிகள்: பா. விஜய்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam