Tuesday, June 22, 2010

உதட்டுக்கும் கன்னத்துக்கும்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

A rose is a rose is a rose rose
A rose is a rose is a rose rose

உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு
ஓஹோஹோ ஓஹோஹோ
(உதட்டுக்கும்..)
உன் கூந்தல் எழில் மாளிகை
என் ரோஜா குடி ஏறுமா
பூவுக்கே பூவைப்பதால்
என்னோடு பரிகாசமா

A rose is a rose is a rose rose
A rose is a rose is a rose rose

நிலா தவமிருந்து முகம் ஆனதோ
விண்மீன் விரதம் கொண்டு விழி ஆனதோ
மழை மேகம் எல்லாம் குழல் ஆனதோ
மின்னல் இறங்கி வந்து இடை ஆனதோ
மருதாணி இல்லாமலே
உள்ளங்கை காட்டாதோ கோவை நிறம்
உள்ளங்கை இதுவானால்
உள்ளங்கம் எல்லாமே அல்வா நிறம்
உன்னை படைக்க தொடங்கும் போதே
பிரம்மன் காய்ச்சல் ஆகி இருப்பான்
உன்னை படைத்து முடித்த பின்னே
அவன் மூர்ச்சை ஆகி இருப்பான்
(உதட்டுக்கும்..)

A rose is a rose is a rose rose
A rose is a rose is a rose rose

உந்தன் நாசி தொட்ட காற்றை கொடு
ஜென்மம் ஏழு வரை வாழ்ந்திருப்பேன்
மண்ணில் விழுந்த உன் நிழல் எடுத்து
மடியில் கட்டிக் கொண்டு அழைந்திருப்பேன்
உழகழகி ஒவ்வொருத்திக்கும்
ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் அமைந்திருக்கும்
உன்னை கண்டு ரசித்துக் கொண்டே
என் காலம் போக வேண்டும்
உன் சுண்டு விரலை பிடித்து
நான் சொர்கம் ஏற வேண்டும்
(உதட்டுக்கும்...)

படம்: பெண்ணின் மனதை தொட்டு
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: தேவன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam