Monday, December 6, 2010

அஞ்சாதே ஜீவா



ஜீவா ஜீவா ஓ ஜீவா ஓ ஜீவா

அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்தப் பூவே அன்பே வா ஜல்
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்தப் பூவே அன்பே வா

என்னைக் கொள்ளையிட்டுப் போகும் அழகே வா
என்னைக் கொன்றுவிட்டுப் போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
(என்னைக்..)

பூக்களையே ஆயுதமாய் கொண்டவன் நீதானே
பூவெறிந்து என்னுயிரைக் கொன்றவன் நீதானே
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா

ஒரு பூவுக்குள் வசிக்கின்ற நிலவே வா
என் போர்வைக்குள் அடிக்கின்ற வெயிலே வா
புதுப் புன்னகை பூக்கும் பூவே வா ஜீவா ஜீவா

காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
(காதல்..)
காற்று இல்லாத இடமும்
அட காதல் தெரியாமல் நுழையும்
கண்ணில் மணியாகி உன்னில் உயிராகி
காதல் யோகம் கொண்டாட வேண்டும்

சந்திர மண்டலம் எல்லாம்
நாம் தாவி விளையாட வேண்டும்
ஒன்பது கிரகம் தாண்டி
நாம் ஓடி விளையாட வேண்டும்
வானம் முடியும் முடியாது காதல் பயணம்
(என்னைக்..)
(அஞ்சாதே..)

காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல்லொன்றும் அல்ல
(காதல்..)
இரவு நேரத்துப் போரில்
நீ என்னை எப்போது வெல்ல
பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும்
முடிவில் இருவரும் வென்றாக வேண்டும்
ஒவ்வொரு காலையின் போதும்
உன் மார்பில் நான் தூங்க வேண்டும்
காலங்கள் முடிகின்ற போதும்
உனை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்
மீண்டும் மீண்டும் நாம் காதல் ஜென்மம் காணலாம்
(என்னைக்..)

படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சீர்காழி சிவசிதம்பரம், ஸ்வர்ணலதா
வரிகள்: வைரமுத்து

2 Comments:

சீனு said...

//பூவென்று என்னுயிரைக் கொன்றவன் நீதானே//

பூவெறிந்து என்னுயிரைக் கொன்றவன் நீதானே

அப்புறம், இந்த பாடலை பாடியவர் சீர்காழி சிவசிதம்பரம். ஒருவேளை அவர் தன் பெயரை ஷிவா என்று வைத்துக்கொண்டாரோ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சீனு மாற்றப்பட்டுவிட்டது

Last 25 songs posted in Thenkinnam