நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகன் புகழை கேளுங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே
நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாருங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே
நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாருங்களே
தரையை தொடாத தென்றலைப் போல்
உன் தாமரை பாதங்கள் நடப்பதென்ன
கல்யாண செய்தியைக் கேட்டவுடன்
என் கால்கள் தரையைத் தொடவில்லையே
கரையைத் தொடாத அலைகளைப்போல்
உன் கருங்குழல் கைகளில் விழுவதென்ன
காதலன் கையினில் சுகம் பெறவே
என் கூந்தல் சரிந்து விழுந்ததய்யா
நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகன் புகழை கேளுங்களே
கங்கையின் சங்கமம் கடலிடத்தில்
எந்தன் கன்னியின் சங்கமம் என்னிடத்தில்
ஜென்மம் பூமியில் விழும் போதே
என் சிந்தை கலந்தது உன்னிடத்தில்
உதடுகளாலே கதை எழுதி
உள்ளத்தை மயக்கிட நான் வரவா
மாலையும் மேளமும் வரும் வரைக்கும்
உன் மனதை அடக்கவும் முடியாதா
நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாருங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே
பாடியவர்கள்.: ஷைலஜா, ஜேஸுதாஸ்
திரைப்படம்: காதல்கிளிகள்
வரிகள் : முத்துலிங்கம்
இசை: கே. வி . மகாதேவன்
Thursday, December 16, 2010
நதிக்கரை ஓரத்து நாணல்களே
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 12:04 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment